வீரர்களின் ஜாலிக்கு பெண்களை அனுப்புகிறார்கள் பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை ஷமியின் மனைவி

டெல்லி: இந்திய வீரர்கள் வெளிநாட்டிற்கு விளையாட செல்லும் போது அவர்கள் கேட்கும் பெண்களை கொடுப்பதற்காக சிலர் மறைமுகமாக இயங்கி வருவதாக முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் தெரிவித்து இருக்கிறார்.

முதலில் அவர் தனது கணவன் குறித்து மட்டுமே புகார் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் தனியார் ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்து இருக்கும் பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மனைவியின் புகாருக்கு ஷமி இப்போதுதான் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் அதற்குள் அவர் அடுத்த புகாரை தெரிவித்து இருக்கிறார்.

முதல் புகார் 
முதல் புகார் கொடுத்தார் .

முதலில் முகமது ஷமி குறித்து ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்தார். ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். அவர் செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதேபோல் அவர் எந்தெந்த பெண்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.

 

தொல்லை

அதுமட்டும் இல்லாமல் ஷமி தன்னை மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னை அவரும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த தென்னாப்பிரிக்க டூரில் கூட இந்த பிரச்சனை வந்தது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

 

பெண்களை அனுப்புகிறார்கள் 
பெண்கள்

இந்தநிலையில் தற்போது ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில் அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் ''இந்திய அணி வெளிநாட்டிற்கு செல்லும் போதும் அங்கு பெண்களை ஏற்பாடு செய்து அனுப்ப சில குழு இருக்கிறது. இவர்கள் நீங்க நாட்களாக இயங்கி வருகிறார்கள். இந்திய அணி எங்கே சென்றாலும் இந்த குழு அவர்களுக்கு பெண்களை ஏற்பாடு செய்யும்'' என்றுள்ளார்.

 

தரகர் 
குல்தீப்

இதற்காக குல்தீப் என்ற தரகர் வேலை செய்வதாக கூறியுள்ளார். குல்தீப் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விவரங்களை இவர் தெரிவிக்கவில்லை. ஆனால் அவரை ஷமியுடன் பார்த்து இருக்கிறேன் என்றுள்ளார். இந்த விஷயம் பிசிசிஐ அமைப்பிற்கு தெரியும் என்றும் அவர் குண்டை போட்டு இருக்கிறார்.