நாதஸ் இப்போ திருந்திட்டாப்ள ஷூட்டிங் நேரத்துக்கு முன்பே ரெடியாகி நிற்கும் சிம்பு

சென்னை : நடிகர் சிம்புவை பற்றி நல்ல விஷயங்களைச் சொல்பவர்களைத் தாண்டி குறை கூறுபவர்கள் தான் அதிகம்.

படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வர மாட்டார், இயக்குனர் சொல்வதைச் செய்ய மாட்டார் என நிறைய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டு வருகிறது.

ஆனால், மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்துவரும் சிம்பு படப்பிடிப்பு நேரத்துக்கு முன்பே முழுவதுமாக ரெடியாகி நடிக்கத் தயாராகி விடுகிறாராம்.

ஷூட்டிங்கில் சிக்கல் 
சிம்பு என்றாலே வம்பு

திரையுலகில் சிம்பு என்றாலே வம்புதான் என்பார்கள். அவரை வைத்து ஒரு படம் இயக்குவதற்குள் போதும் போதும் என்றாகி விடும் என்கிற பேச்சு தான் அதிகம் கேட்கமுடியும். 'AAA' படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் சிம்புவைப் பற்றி அத்தனை குற்றச்சாட்டுகளைக் கூறினார்கள்.

 

AAA 
சிம்புதான் காரணம்

சிம்பு நடித்த, 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் தோற்றுப்போனதற்கு காரணமே சிம்பு தான் என்றார்கள். அவர் ஒருநாள்கூட சரியாக படப்பிடிப்புக்கு வந்ததில்லை என்று குற்றம் சாட்டி, அவரிடத்தில் ரூ.18 கோடி நஷ்ட ஈடு கேட்டார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். அதையடுத்து சிம்புவிற்கு ரெட் கார்டு போடும் நிலை உருவானது.

 

முன்னணி நடிகர்கள் 
மணிரத்னம் படத்தில்

இந்த நிலையில், தற்போது மணிரத்னம் இயக்கி வரும் 'செக்கச் சிவந்த வானம்' படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.

 

குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே 
மாற்றிக்கொண்ட சிம்பு

இவ்வளவு நாளாக படப்பிடிப்பு 9 மணிக்கு என்றால் மதியத்திற்கு மேல்தான் ஸ்பாட்டுக்கு வருவார் என்று கூறப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் 9 மணி என்றால் அதற்கு முன்பே சென்று மேக்கப் போட்டு தயாராகி விடுகிறாராம் சிம்பு. இதனால் படக்குழுவினரே ஆச்சரியம் அடைந்துள்ளனர்.