புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள அண்ணன் தங்கை கண் கலங்க வைக்கும் புகைப்படம்

கனடாவில் அண்ணன் தங்கை இருவரும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் Quebec பகுதியில் உள்ள Aylmer பகுதியை சேர்ந்த Jason - Liliane Hajjar தம்பதியினருக்கு Jacob , Liam என இரண்டு மகன்களும் சோபியா என்ற மகளும் உள்ளனர்.

Jacob-இற்கு 5 வயதின்போது தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போனது. வாந்தி எடுத்தபடியே இருந்துள்ளான். இதனால் மருத்துவமனையை அணுகிய போது Jacob-க்கு புற்று நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மற்றைய மகன் மற்றும் மகளையும் பரிசோதித்த போது சோபியாவுக்கும் புற்று நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சகோதரர்கள் இருவரும் ஒரே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

 

மேலும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட Jacob பார்வை மற்றும் செவிப்புலனையும் இழந்துள்ளார். அத்துடன் சில வாரங்களுக்கு முன்னர் கிட்னியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார். இதே வேளை சோபியாவுக்கு வழங்கப்படும் சிகிச்சையினால் அவரது உடல் முன்னேற்றம் அடைந்து வருகின்றது. இருப்பினும் இந்த சிகிச்சைகளால் அவளுடைய வாழ்க்கை காலத்தை சற்று அதிகரிக்கலாமே தவிர முற்றாக புற்று நோயை குணப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இந்நிலையில் Liliane Hajjar தனது முகப்புத்தகத்தில் தனது மகன் மற்றும் மகள் இறுக கட்டி அணைத்தபடி எடுத்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்து தனது மனக்கவலையை பதிவு செய்துள்ளார். அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு அனைவரும் உருக்கமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவர்களின் மருத்துவ செலவிற்கு அவர்களின் குடும்ப நண்பர் ஒருவர் நிதி திரட்டி வருகின்றார். இதுவரை 20,000 நிதி வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.