இந்தியா அணி வெற்றி பெறுவது சாத்தியம் இல்லை ரோஹித் சர்மா

இருபதுக்கு 20 போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று கூற முடியாது என இந்தியா அணியின் இலங்கை தொடருக்கான அணித்தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இலங்கை நாட்டின் நடைபெற்று முடிந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் அணிகள் பஙகுபற்றும் முததொடர் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதனடிப்படையில் இன்று முதல் 18 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளது.

இப் போட்டியில் இந்தியா அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்துள்ளதால், இந்தியா அணி ரோஹித் சர்மா தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கவுள்ளது. இது குறித்து ரோஹித் சர்மா தெரிவிக்கையில், "இருபதுக்கு 20 போட்டியில் இந்தியா அணி வெற்றி பெறுமா? இல்லையா? என தீர்மானிக்க முடியாது. ஏனெனில் இருபதுக்கு 20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டும் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பெறும். இதனடிப்படையில் இளம் வீரர்களுடன் களமிறங்கியுள்ள இந்தியா அணியை வழி நடத்துவதில் பெருமை அடைகின்றேன்." என தெரிவித்துள்ளார்.