இந்தியா வர ஆசைதான் ஆனாலும் வர மாட்டேன் நீரவ் மோடி சொல்லும் வித்தியாசமான 3 காரணங்கள்

டெல்லி: தான் ஏன் இந்தியா வரவில்லை என்று நீரவ் மோடி மூன்று காரணங்கள் சொல்லி இருக்கிறார். இந்தியாவில் இருக்கும் அரசியல்வாதிகள் குறித்தும் இவர் பேட்டி அளித்துள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது.

அவர் ஹாங்காங்கில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் நீரவ் மோடியை மத்திய அரசு தீவிரமாக தேடி வருகிறது.

மூன்று சம்மன் 
சம்மன்

இந்த வழக்கில் நீரவ் மோடிக்கு மூன்று சம்மன் அனுப்பப்பட்டது. முதல் சம்மனுக்கு அவர் ''எனக்கு வெளிநாட்டில் வேலை இருக்கிறது'' என்று பதில் அளித்தார். இரண்டு சம்மனுக்கு பதில் அளிக்கவில்லை. தற்போது மூன்றாவது சம்மனில், இந்தியா வர முடியாது என்றுள்ளார்.

 

பாதுகாப்பு முக்கியம் 
பாதுகாப்பு

இதற்கு முக்கிய காரணமாக ''எனக்கு என் பாதுகாப்பு முக்கியம். என் நிறுவனத்தில் வேலை செய்யும் பெண்களை இரவு 8 மணிக்கு மேல் கூட கைது செய்கிறார்கள். அவர்களுக்கே அப்படி என்றால் என் நிலைமை. நான் இந்தியா திரும்ப விருப்பப்படுகிறேன். ஆனால் அங்கு எனக்கு பாதுகாப்பு இல்லை'' என்றுள்ளார்.

 

அவமானப்படுத்திவிட்டார்கள் 
அவமானம்

மேலும் ''என்னை ரொம்பவே அசிங்கப்படுத்திவிட்டார்கள். அரசியல்வாதிகள் என்னை பற்றி தவறுதலாக பேட்டியில் பேசுகிறார்கள். இதனால் என் வியாபாரம் ரொம்பவே அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதை என்னால் எதிர்க்கொள்ள முடியவில்லை'' என்றுள்ளார்.


காப்பாற்ற வேண்டும் 
காப்பாற்ற விருப்பம்

மேலும் ''வெளிநாட்டில் தனக்கு உதவி இருக்கும் நிறுவனங்களை காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த நிறுவனங்களை என்னால் கைவிட முடியாது. இங்கு எனக்கு சில வங்கிகள் கூட உதவி இருக்கிறது. அவர்களை என்னால் அப்படியே விட்டுவிட்டு வர முடியாது'' என்றுள்ளார்.