டிவில்லியர்ஸை வம்பிழுத்த கையோடு டிரெஸ்ஸிங் ரூமில் டி காக்குடன் சண்டை போட்ட வார்னர் வீடியோ

தென்னாப்பிரிக்கா-ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் 118 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் நாதன் லயன் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டது ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்கள் மற்றும் அணி வீரர்களாலும் விரும்பப்படவில்லை.

இரண்டாவது இன்னிங்சில், டிவில்லியர்ஸை ரன் அவுட்டாக்கிய நாதன் லயன், ரன் ஓடி கீழே விழுந்து கிடந்த டிவில்லியர்ஸின் பக்கத்தில் பந்தை தூக்கி போட்டு போனது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. 

அதேபோல, டிவில்லியர்ஸை அவுட்டாக்கிய வார்னர், ஆக்ரோஷமாக அவரைப் பார்த்து கத்தியதும் விமர்சனத்துக்கு ஆளானது.

அத்துடன் நிறுத்தாமல், டிரெஸ்ஸிங் ரூம் அருகே தென்னாப்பிரிக்க வீரர் டி காக்குடன் சண்டைக்கு சென்றுள்ளார். இந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. டி காக்கிற்கும் வார்னருக்கும் என்ன பிரச்னை, யார் முதலில் தொடங்கியது என்பன போன்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால், வார்னர் கோபமாக திட்ட செல்வதும், அவரை தடுத்து ஸ்மித் உள்ளிட்ட சக வீரர்கள் அழைத்து செல்வதும் பதிவாகியுள்ளது.