கி.மு.500 க்கு முன்னர் இந்தியா முழுவதும் தமிழே பேசப்பட்டது என்பதற்கு சாட்சி

கி.மு.500 க்கு முன்னர் இந்தியா முழுவதும் தமிழே பேசப்பட்டது என்பதற்கு சாட்சி!வாய்யடைத்துப்போன வல்லுநர்கள்!

இந்தியா முழுவதும் மக்கள் பெயர், ஊர்ப்பெயர்களில் உள்ளது
முற்றிலும் தமிழே, தமிழ் மட்டுமே.

1. சாஸ்திரி - சா (நான்கு) + திறம் தெரிந்தவர்
        
2. சர்மா - ஆரியர் வட இந்தியரோடு கலந்ததால் கருத்த நிறம் பெற்றனர்.

நிறமாற்றம் பெற்றவர் சரும மாற்றத்தால் சர்மா என பெயர் மாற்றம் பெற்றனர்.

3. வனஜா, கிரிஜா - மூலப்பெயர்கள் வனயா, கிரியா. ஆய், ஆயா என்பது தாய், பெண்

எனப்பொருள் படும். வனப்பு, அழகு மிக்க பெண், என்ற பொருளிலும், மலை - கிரி - மலை

போன்று புயலாலும் அசராத பெண்.

4. பங்கஜம் - தாமரை = பங்கஜம் - பன் + கை+ அம் = பல இதழ்களை உடைய மலர்.

5. சங்கரன்=சங்கு+கரன், இது இன்று இன்னும் சுருக்கப்பட்டு சங்கர், ஷங்கர் என்றாகிவிட்டது.

6. பட்நாயக்-பட்டி+நாயகன். அதாவது ஊர்த்தலைவன்.

7. சிங்கம் என்ற தமிழ் சொல்லே வட இந்தியாவில் குறிப்பாக பஞ்சாபில் சிங் என மாறியுள்ளது.

மன்மோகன்சிங், ஜெயில்சிங், பகத்சிங்

8. ரஹ்மான் - இரக்கமான மனிதன் - (ஏ. ஆர். ரஹ்மான்)

9. சுலைமான் - சூல் வழி வந்த மனிதன், ஆங்கிலத்தில் Solomon, தமிழில் அப்படியே சாலமன்.

(விவிலிய அரசன் சாலமோன், சாலமன் பாப்பையா)

10. நுஹ்மான் - நுட்பம் நிறைந்தவன்  

11. கேசரி - கேசம் உள்ள அரி (அரிமா என்றால் சிங்கம், கேசம் உள்ள சிங்கம், பிடரி உள்ள சிங்கம்)

சீதாராம் கேசரி, கேசரிவர்மன்.

இதிலிருந்தே ஜெர்மானிய கெய்சர் மன்னன் (Keiser. காண்க:),

இத்தாலிய சீசர் மன்னன் (Caesar- இத்தாலியில் சேசரே என உச்சரிப்பு),

ரஷ்ய ஜார் மன்னன் (Tzar/Czar. காண்க:)

12. சகுந்தலா - ச+கூந்தலா - அடர் கூந்தலை உடைய பெண்.

13. கேசம் - முடி. நீலகேசி -கருநீல கூந்தலை உடையவர். புலிகேசி புலி போன்ற கேசம் உடையவர்.

14. விநாயக் - வி + நாயகன் = அகன்ற நாயகன்.

15.விசுவாமித்திரர் - விசுவம் - அகன்ற உலகம் + மித்திரன் - அரசன்

16. இலட்சுமி -எல் என்றால் ஒளி, வெளிச்சம் - ஒளியின் நாயகி.

17. ரேவதி - ஏர் + அத்தி(வதி) - அழகான பெண்

18. கஜேந்திரன் - கஜ + இந்திரன்

(கஜ என்றால் யானை என்று பொருள். மூலச்சொல் - கைமா - கையுள்ள பெரிய விலங்கு.

சாதி ஜாதி ஆவது போல் கைமா கஜமா ஆகிவிட்டது.

அஷ்டதிக்கஜங்கள் - எட்டு கரங்கள், எட்டு வழிமுறைகள்)

இப்படி ஏராளமாய் சொல்லிக்கொண்டே போகலாம். எந்த சமசுகிருத வார்த்தையையும் பிரித்து

எழுதினால் கண்டிப்பாக தமிழே அங்கு இருக்கும்.

 16) இந்தியா முழுவதும் ஊர்ப்பெயர்களில் தமிழே, தமிழ் மட்டுமே.

1. ஊர்,(ப் + ஊர் = பூர்) என்றால் நீர் நிலைகளுக்கு அருகில் உள்ள ஊர் என்று பொருள்.

       (எ. கா)
 ஜெய்ப்பூர், உதய்ப்பூர் [ராஜஸ்தான்].
 மணிப்பூர் [வடகிழக்கு மாநிலம்],
 லாகூர் [பாகிஸ்தான்]
கிண் ஆவூர் [பஞ்சாப்]
பாடலிபுத்திரம் என்ற பாதிரி புத்தூர் (பாட்னா) [பீகார்]
திரிச்சூர் [கேரளா]
பெங்களூர், மைசூர் [கர்நாடகா]
நெல்லூர், சித்தூர் [ஆந்திரா]
நாக்பூர், லாத்தூர் [மகாராஷ்டிரா]
கான்பூர் [உத்தரப்பிரதேசம்]
திமாப்பூர் [அசாம்]
இந்த ஊர் என்பது இலத்தீனில் Urbs, Urbis  என்று ஆகி ஆங்கிலத்தில் Urban (நகரம் சார்ந்த), Rural (கிராமம் சார்ந்த) என்று வழங்கப்பட்டு வருகிறது. காண்க:

2. புரி - என்றால் திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஊர், நகரம் என்று பொருள்.
 நாகபுரி மற்றும் பல.
3. வாடி, பாடி- என்றால் படை வந்திறங்கிய இடம் என்பது பொருள். இந்த பாடி வட நாட்டில் திரிந்து பாத்

ஆகியுள்ளது. வாடிப்பட்டி, தாளவாடி, அலகாபாத்...

4. கோட்டை: பதான்கோட் (pathankot), ராஜ்கோட் (rajkot)

5. தானம் - என்றால் போர் நடந்த இடம் என பொருள்.

தானைத்தலைவன் என்றால் படைகளின் தலைவன் என்றே பொருள்.

இன்றைய காலகட்டத்தில் ஈனத் தலைவனை எல்லாம் தானைத்தலைவன் என்று சொல்லும்படி ஆகிவிட்டது.

தானம், ஸ்தானம், ஸ்தான். இராஜஸ்தான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இஸ்தான்புல் (துருக்கி)

6. நகர்.

1. சீர்+ நகர் ஸ்ரீநகர். காசுமீரம்., Dadar Nagar Haveli, அஹ்மத்நகர்,

உலகின் 7வது பெரிய நாடான இந்தியாவில் உள்ள 6 லட்சம் சிற்றூர், 10,000 க்கும் மேற்பட்ட நகரங்களில்

ஒன்று கூட சமசுகிருதப்பெயர் இல்லை.

எந்த ஊர்ப்பெயரின் மூலமும் சமசுகிருதத்தை கொண்டிருக்கவில்லை.

17) தமிழ் மொழிப்பரவல் மாநில வாரியாக:

1. மேற்கு வங்காளம்

      1. வங்க தேசம் - மேற்கு வங்காளம், பங்களாதேஷ் - வங்க - தேசம் - வேங்க தேசம் - புலிகளின் நாடு.

      2. கல்கத்தா அ கொல்கத்தா வின் மூலப்பெயர் காளி கோட்டம். காளி அ துர்க்கை என்பவர் தமிழ்

கொற்றவை ஆவார். இந்தக் காளி என்பதே காலன் என்ற எமன் என்ற மனித வாழ்க்கை காலத்தை

நிர்ணயிக்கும் பொதுவான காலத்தினைக் குறிக்க தமிழர் பயன்படுத்திய பெண்பால் மற்றும்  

ஆண்பால் பெயர்களே.

      3. மேற்கு வங்காளம் என்றவுடன் நம் நினைவுக்கு வரும் நபர்களில் ஒருவர் சத்யஜித்ரே. பதேர் பாஞ்சலி

என்ற புகழ் பெற்ற திரைப்படத்தை இயக்கியவர். இந்த பதேர் பாஞ்சலி யின் பொருள் என்ன.

"பாதைக்கு பா அஞ்சலி" என்பதே. காண்க: சுத்தத் தமிழ்ப்பெயர்.

       4. உபாத்தியாயா - உப + வாத்தியார் (துணை ஆசிரியன்)

       5. சடகோபத்தியாய - சட்ட + உப + வாத்தியார் பின்னர் இது சட்டர்ஜி ஆகியுள்ளது.

       6. Sunderban Forest - சுந்தரவனம் என்ற சுத்தத் தமிழ்ப்பெயர்; பொருள் அழகிய வனம், காடு.

(சுந்தரி நீயும் சுந்தரன் நானும்...).

Sunderban Forest என்பது சுந்தரவன வனம் என்று 2 முறை சொல்வது போல் உள்ளது. சுந்தரவனத்தில் உள்ள

ஒரு தீவின் பெயர் காக்கா தீவு (இடது ஒர சிவப்பு சாலை அருகே உள்ளது)

         7. வங்காள மொழி அறிஞரான சுனிந்த் குமார் சட்டர்ஜி என்பவர் (இவர் தன் பெயரை தமிழ் மேல் உள்ள

விருப்பால் நன்னெறி முருகன் என்று மாற்றிக்கொண்டவர்). வங்காள மக்கள் தமிழ் மக்களே என்றவர்.

ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் இவர் படித்த 3 ம் கட்டுரை:

 "மங்கோலியாவில் தமிழ் ஊர்ப்பெயர்கள்." பக்கம் 39.

8. மேற்கு வங்காளத்தில் மிக முக்கிய திருவிழா தசரா திருவிழா. தமிழில் தசம் என்றால் பத்து என்பதை நாம் அறிவோம். தசம எண்கள் என்பது 1 முதல் 10 வரை என்பதையும் நாமறிவோம். வங்காளத்தில் இந்த திருவிழா 10 நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. காண்க:

10 நாட்கள் கொண்டாடப்படும் தசரா திருவிழாவில் ஒரு நாள் துர்கா பூஜை யாக கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு திருவிழாவிலும் ஆரிய பிராமணர்களின் கள்ளத்தனத்தை நாம் காண முடியும். துர்கா பூஜை யில் காளி என்ற தமிழ் தெய்வத்தைக் கொண்டே தமிழர்களாகிய அசுரர்களை வதம் செய்யும், கொலை செய்யும் படு பாதக செயலை ஒரு திருவிழாவாக அழிக்கப்படும் மக்களே கொண்டாடும் வகையில் ஒரு வரலாற்று படுகொலைத் திணிப்பு திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கிறது.

நம்மூர் தீபாவளியில் தமிழர்களின் தெய்வம் கிருஷ்ணன் மூலமே நரகாசுரன் என்ற அசுரன், தமிழன் கொல்லப்படுவதை தமிழர்களே கொண்டாடும் வகையில் தீபாவளி இருக்கிறதல்லவா அது போலத்தான் துர்கா பூஜையும், தசரா திருவிழாவும். எல்லாம் ஆரியர்களின் திட்டமிட்ட சதி யும், வரலாற்றுத் திணிப்புகளும்.

தீபாவளியில் தமிழர் தெய்வம் கிருஷ்ணன்(கண்ணன் என்னும் மன்னன்)கொல்லும் நரகாசுரன் ஒரு தமிழன்.

துர்கா பூஜையில் தமிழர் தெய்வம் காளி கொல்லும் மகிஷ அசுர் ஒரு தமிழன்.

தசரா திருவிழாவின் இறுதியில் தமிழர் தெய்வம் ராமன் கொல்லும் இராவணன் ஒரு தமிழன்.

 இத்திருவிழாக்கள் பற்றி மேலும் விளக்கம் பெற: காண்க:
 
9. இதே போல கர்நாடகா மைசூரிலும் கொண்டாடப்படும் தசரா பண்டிகையும் 10 நாட்களுக்கு கொண்டாடப்படும் திருவிழாவே.