காலான்னா கருப்பு இல்ல காப்பி காலா டீசரில் அஜித் விஜய் பட சீன்கள்

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் 'காலா' படத்தின் டீசர் யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இப்படத்தின் டீசர் நள்ளிரவு 12.10 மணிக்கு வெளியானது. ஆனால், வெளியாவதற்கு முன்பாக இணையத்தில் லீக் ஆனது குறிப்பிடத்தக்கது.

காலா படத்தின் டீசரில் விஜய் மற்றும் அஜித் நடித்த படங்களின் சாயல் இருப்பதாக சமூக வலைதளங்களில் அவர்களது ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

காலா டீசர் 
விஜய் அஜித்

விஜய், அஜித், தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், பவன் கல்யாண் ஆகியோரின் படங்களிலிருந்து ரஜினியின் காலா டீசர் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

காலா காப்பி 
பல படங்களில்

ரஜினி மழையில் நின்றபடி சண்டையிடும் காட்சிகள் இதற்கு முன்னதாக பல படங்களில் காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும், ரஜினிக்கென்றே இருக்கும் மாஸ் எப்போதுமே ஸ்பெஷல் தான்.

 

விஜய் 
தெறி

'தெறி' படத்தில் விஜய் நடித்திருக்கும் இந்த காட்சியைப் போல தான் 'காலா' டீசரில் வரும் காட்சியும் இருக்கிறதாம்.


காப்பி 
மெர்சல்

மெர்சல் விஜய் படத்தின் காட்சியை கொஞ்சம் அப்டியே கலர் மாத்தினா காலா காட்சி ரெடி!


தெலுங்கில் 
ஜூனியர் என்.டி.ஆர்

'ஜெய் லவ குசா' படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் வரும் சீன் கூட இப்படித்தான் இருக்காமே?


வீரம் 
அஜித்

கண்ணாடி போட்டா காலா. கண்ணாடி போடலைனா வீரம். இந்த சீனை எல்லோருக்கும் முன்னாடி 'வீரம்' படத்துல அஜித்தை வெச்சு சிறுத்தை சிவா ட்ரை பண்ணிட்டார்.


தெலுங்கு 
வெங்கடேஷ்

இந்த மழையில் குடையோடு வரும் காட்சியை கிட்டத்தட்ட எல்லா ஹீரோக்களுமே பண்ணியிருப்பாங்க போல!


விஜய் 
எப்பவோ பண்ணியாச்சு

இதெல்லாம் நாங்க எப்பவோ பண்ணிட்டோம்னு லுக் விடுறாரோ தளபதி!