நிரவ் மோடி இங்கதான் இருக்காரான்னு தெரியலையே கூறுகிறது அமெரிக்கா

வாஷிங்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியை சூறையாடி விட்டு தப்பி ஓடி விட்ட வைர வியாபாரி நிரவ் மோடி அமெரிக்காவில் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்று அமெரிக்க அரசு கூறியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிரவ் மோடி அமெரிக்காவில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்பதை அறிவோம். அதேசமயம் அதை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ளார்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13,000 கோடி அளவுக்கு கடன் வாங்கி ஏப்பம் விட்டு விட்டு படு கேஷுவலாக நாட்டை விட்டு ஓடி விட்டார் நிரவ் மோடி. இதுதொடர்பாக சிலரை சிபிஐ கைது செய்துள்ளது. ஆனால் முக்கியத் திருடனான நிரவ் மோடி தப்பி விட்டார்.

நிரவ் மோடி அமெரிக்காவுக்கு ஓடி விட்டதாக தகவல்கள் உள்ளன. அதேசமயம், மேற்கு இந்தியத் தீவுகளில் அவர் ஒரு வீட்டை வாங்கி அங்கு செட்டிலாகி விட்டதாகவும் இன்னொரு தகவல் உள்ளது.

இந்த நிலையில்தான் நிரவ் மோடி இங்கு இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று அமெரிக்க அரசு கையை விரித்துள்ளது.