அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்பே இணையத்தில் லீக்கான காலா டீசர்

சென்னை: ரஜினிகாந்தின் காலா பட டீசர் யூட்யூபில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் முன்பே இணையத்தில் லீக் ஆனது படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படமான காலா.. கரிகாலன் டீசர் மார்ச் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் 24 மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் பெரும் ஆவலோடு ரசிகர்கள் டீசருக்காகக் காத்திருந்த நிலையில், திடீரென நேற்றே காலா டீசரின் 10 வினாடி காட்சி லீக்கானது. இரவிலேயே மீண்டும் டீசரின் முழு வடிவமும் வெளியாகிவிட்டது.

காலை 10 மணிக்குத்தான் டீசர் வெளியாகும் என பலரும் காத்திருந்த நிலையில் நேற்றே இணையத்தில் காலை டீசர் கசிந்தது படக்குழுவினரை அதிர வைத்தது.

ரஜினியின் கபாலி படத்தின் டீசர், படக்காட்சிகள் எதுவும் கடைசி வரை கசியாமல் பார்த்துக் கொண்டனர். ஆனால் காலாவின் டீசரை இப்படி கசியவிட்டுவிட்டார்களே என பல ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

எப்படி இருந்தாலும் டீசர் சிறப்பாக வந்ததில், அது முன் கூட்டியே லீக்கான சமாச்சாரத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ரசிகர்கள். படம் வரும் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகிறது.

டீசர் லீக் ஓகே.... ஆனா படம் கசிந்திடாம பாத்துக்கங்கப்பா!