இனி இது உங்கள் நாடு சிரியா அகதிகளுக்கு இடம் கொடுத்த கனடா பிரதமர்

இனி நீங்கள் உயிருக்கு பயந்து வாழ் வேண்டாம். உங்களுக்கு பாதுகாப்பு நான் கொடுக்கிறேன் ஏன் நாட்டுக்கு வாங்க என சிரியாவில் இருந்து வரும் அகதிகளுக்கு கனடாவில் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறார் கனடா  பிரதமர்.

 

 

இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசி இருக்கிறார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் போராடி வருகிறார்கள். சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது.

 

 

சிரியாவில் நடந்து வரும் இந்த பயங்கர தாக்குதல் காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 800 பேர் மரணம் அடைந்துள்ளார்கள் இந்த கொடூர தாக்குதலில் பிஞ்சுக் குழந்தைகள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

 

 

இந்த பயங்கர தாக்குதலின் காரணமாக முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மாதம் 300 பேரும், கடந்த இரண்டு மாதங்களில் 500க்கும் அதிகமானவர்களுக்கு கனடா நாட்டில் குடியேறி இருக்கிறார்கள். இவர்களுக்காக எளிதாக விசா, குடியுரிமை பெற வசதி செய்துகொடுக்கபட்டுள்ளது. இதற்காக, எந்த நாடும் செய்யாததை கனடா செய்திருக்கிறது. அந்த நாட்டின் விதியில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 

 

அதேபோல, இவர்களை பற்றி தகவலை பகிர்ந்து கொள்ள கடந்த டிசம்பர் மாதமே 'வெல்கம் டூ கனடா' ( #welcometocanada - Twitter Search ) என்ற ஹேஷ்டேக்கும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஹேஷ்டேக் போட்டு அந்நாட்டு அதிகாரிகள் பலர் டிவிட் செய்து வருகிறார்கள். அதேபோல் அகதிகளாக நாட்டிற்குள் வந்துள்ள மக்களும் டிவிட் செய்து வருகிறார்கள்.

 

 

கடந்த 2015ல் இருந்தே அகதிகளுக்கு கனடா இது போன்ற வீடு அளித்து வருகிறது. அதேபோல பல சிரியா அகதிகள் தங்களுக்கு கனடாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஜஸ்டின் என்று கனடா பிரதமர் பெயர் வைத்து இருக்கிறார்கள். இவர்களுக்கு படிக்கவும் வசதி செய்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.

 

 

இதுகுறித்து ஜஸ்டின் அந்நாட்டு புதிய குடிமக்களிடம் பேசினார். அப்போது ''இது எங்கள் நாடு மட்டும் இல்லை. இனி உங்கள் நாடும். இனி நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்'' என வாக்குறுதி கொடுத்து அகதிகளாக அல்லாமல் இந்த கனடா நாட்டின் குடிமக்களாக மாற்றியிருக்கிறார்.