ரஜினியின் அரசியல் நுழைவை பேசும் படமா காலா ரஞ்சித்தின் பதில் இதோ

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம், இந்திய அரசியலின் முதுபெரும் தலைவர் கலைஞரின் உடல்நலக்குறைவு உள்ளிட்ட காரணங்களால் நடிகர்களின் அரசியல் வருகை தற்போது நிகழ்ந்தவண்ணம் உள்ளது. நடிகர் கமல் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியினை துவங்கியுள்ளார். அதே போன்று ரஜினியும் தனது ரசிகர் மன்றத்திற்கான உறுப்பினர்கள் சேர்க்கும் செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளார்.

இந்நிலையில், கபாலி திரைப்படத்தின் பெருவெற்றிக்கு பிறகு பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் காலா. நாளை காலா திரைப்பட டீசர் வெளியிடப்பட உள்ள நிலையில், காலா திரைப்படம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார் இயக்குனர் ரஞ்சித்.

ரஜினியின் அரசியல் நுழைவை பேசுகிற படமா காலா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ரஞ்சித், "காலா கதையை ரஜினிசாரிடம் சொல்லும்போதிலிருந்து, படப்பிடிப்பு நடந்து முடியும்வரை அவருக்கு அரசியலில் களமிறங்கணும்ங்கிற ஆர்வம் இருந்த மாதிரி எனக்குத் தெரியல. அரசியலுக்கு வருவேன்னு அவர் அறிவிக்கிறதுக்கு முன்னாடியே எழுதப்பட்டு, படமாக்கப்பட்டிருக்கிற ஒரு படம் இது. அவருடைய அரசியல் நுழைவை இந்தப் படம் வலுப்படுத்தினால் அது ஒரு தற்செயல் நிகழ்வுதான்." என தெரிவித்துள்ளார்.