ஸ்ரீதேவியின் ட்விட்டர் கணக்கில் இருந்து ட்வீட்டிய போனி கபூர் என்ன சொல்லியிருக்கிறார்

மும்பை: ஸ்ரீதேவியின் ட்விட்டர் கணக்கில் இருந்து அவரது கணவர் போனி கபூர் ட்வீட்டியுள்ளார்.

பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டாரான ஸ்ரீதேவி சனிக்கிழமை மாலை துபாயில் உயிர் இழந்தார். அவரது உடல் செவ்வாய்க்கிழமை இரவு மும்பை கொண்டு வரப்பட்டு நேற்று இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் ட்விட்டர் கணக்கில் இருந்து அவரது கணவர் போனி கபூர் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,

தோழி 
மனைவி

ஒரு தோழி, மனைவி, 2 மகள்களின் தாயை இழந்தது வார்த்தைகளால் சொல்ல முடியாது. எங்களுக்கு ஆதரவாக இருந்த என் குடும்பம், நண்பர்கள், உடன் பணியாற்றுவோர், நலம் விரும்பிகள், ஸ்ரீதேவியின் எண்ணற்ற ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

ஜான்வி 
குஷி

எனக்கும், ஜான்வி, குஷிக்கும் அர்ஜுன், அன்சுலா ஆதரவாக இருப்பது ஆறுதலாக உள்ளது. உலகத்திற்கு அவர் சாந்தினி... நிகரற்ற நடிகை... அவர்களின் ஸ்ரீதேவி...ஆனால் எனக்கு அவர் என் காதலி, தோழி, எங்கள் மகள்களின் தாய்...என் பார்ட்னர். எங்கள் மகள்களுக்கு எல்லாமே அவர் தான்...அவர்களின் வாழ்க்கை. அவரை சுற்றியே எங்கள் குடும்பம் நடந்தது.

 

ஸ்ரீதேவி 
நடிகை

ஸ்ரீயை பற்றி பேச வேண்டுமானால் அவரை பற்றி நல்ல விஷயங்களை பேசுங்கள். ஒரு நடிகையாக அவர் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அதற்காக அவரை மதியுங்கள். நடிகர் இறந்தாலும் வெள்ளித்திரையில் தொடர்ந்து ஜொலிப்பார்கள்.


மகள்கள்

என் மகள்களை பாதுகாத்து, ஸ்ரீ இல்லாமல் வாழ வேண்டும் என்பதே என் தற்போதைய கவலை. அவர் தான் எங்களின் வாழ்க்கை, தெம்பு மற்றும் நாங்கள் சிரிக்க காரணம். அவர் மீது அளவில்லா அன்பு வைத்துள்ளோம். உன் ஆத்மா சாந்தியடையட்டும். நீ இல்லாமல் எங்கள் வாழ்வு பழையபடி இருக்காது என்று போனி கபூர் தெரிவித்துள்ளார்.