அஜித் பாடலுக்கு ஆடி சும்மா தெறிக்கவிட்ட துல்கர் சல்மான் ஸ்ருதி ஹாசன்

திருவனந்தபுரம் : தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துக்கென ஒரு தனி இடம் இருக்கிறது. அஜித்தின் பாடல்களை எந்தப் படத்தில் பயன்படுத்தி இருந்தாலும், அதற்கு அவ்வளவு ரெஸ்பான்ஸ் கிடைக்கும்.

சமீபத்தில் கேரளாவில் 2018-ம் ஆண்டுக்கான வனிதா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் முன்னணி மலையாள நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் விருது பெற்ற துல்கர் சல்மானோடு, விருது வழங்கிய ஸ்ருதி இணைந்து ஆலுமா டோலுமா பாடலுக்கு செமையாக டான்ஸ் ஆடினார்.

ரசிகர்கள் 
அஜித்

தமிழ் சினிமாவில் அஜித்துக்கென தனி இடம் இருக்கிறது. அவருக்கு ரசிகர்கள் பலம் மிகவும் அதிகம். அவரின் படங்களில் பாடல்களை அவர்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். அதற்கு தியேட்டரில் விசில் சத்தம் தெறிக்கும்.

 

ஹிட் பாடல் 
ஆலுமா டோலுமா

அப்படியாக ஹிட்டான ஒரு பாடல் தான் அஜித் நடித்த 'வேதாளம்' படத்தின் ஆலுமா டோலுமா பாடல். இந்தப் பாடலுக்கு மலையாள முன்னணி நடிகர் துல்கர் சல்மானும், ஸ்ருதி ஹாசனும் இணைந்து செமையாக டான்ஸ் ஆடியிருக்கிறார்கள்.

 

கேரள விருது 
வனிதா விருதுகள்

சமீபத்தில் கேரளாவில் வனிதா விருதுகள் 2018 நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பாப்புலர் ஹீரோ என்ற பிரிவில் நடிகர் துல்கர் சல்மான் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடிகை ஸ்ருதிஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு துல்கருக்கு விருதை வழங்கினார்.

 

வேதாளம் பாடல் 
ஜோடியாக டான்ஸ்

அப்போது துல்கர் சல்மானும், ஸ்ருதிஹாசனும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு எந்தவித மறுப்பும் சொல்லாமல் சம்மதித்த இருவரும், 'ஆலுமா டோலுமா' பாடலுக்கு மேடையில் நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்தனர்.


ட்ரெண்ட் 
ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித் பாடலுக்கு துல்கரும், ஸ்ருதியும் சிறப்பாக ஆடியதால் பார்வையாளர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். இவர்கள் ஆடிய வீடியோ யூ-ட்யூபிலும் ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.