சிரிய அகதிகளை தமிழுணர்வோடு அழைக்கும் கனேடிய பிரதமர் இதுவரையில் நடந்திராத நிகழ்வு

சிரியா நாட்டில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளை கைப்பற்ற அந்நாட்டு ராணுவம் போராடி வருகின்றது.

அவர்களுக்கு துணையாக அமெரிக்கா மற்றும் ரஷியா நாட்டின் விமானப்படையினர் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

சிரியா நாட்டின் முக்கிய நகரமான 'அல்-மயாடின் நகரை' ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ராணுவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீட்டது. 

இங்கிருந்து சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள 'அல்-ஓமர்' கச்சா எண்ணெய் வயலை அமெரிக்க படைகள் துணையுடன் சிரியா ராணுவம் தற்போது கைப்பற்றியுள்ளது. 

நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான இந்த கச்சா எண்ணெய் வயலில், நாள் ஒன்றுக்கு ஒரு முறை 75,000 பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், வளங்களுக்காகவும், அரசு இயந்திரம் செயலிழந்த காரணத்தாலும் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், சிரியாவில் இருந்து வரும் அகதிகளுக்கு கனடாவில் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே நிறைய அகதிகள் அந்த நாட்டில் குடியுரிமை பெற்று இருக்கிறார்கள்.சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் இதுவரை 800 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

இதுவரை கனடாவில் முதற்கட்டமாக கடந்த டிசம்பர் மாதம் 300 பேருக்கும், கடந்த இரண்டு மாதங்களில் 500க்கும் அதிகமானவர்கள்  குடியேறி இருக்கிறார்கள்.

இதற்கமைய எளிதாக விசா, குடியுரிமை பெற வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக விதியில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது

தற்போது, சிரிய விவகாரம் குறித்து பேசிய பிரதமர் ஜஸ்டின், "புதிய குடிமக்களிடம், இது எங்கள் நாடு மட்டும் இல்லை. இனி உங்கள் நாடும். இனி நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இன்னலில் தவித்து வரும் மக்களை தமிழர்களை போலவே அரவணைத்து பாவிப்பதில், உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் கனடா தன்னாலான முயற்சிகளை எடுத்து வருவது  குறிப்பிடத்தக்கது.