நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்று உங்கள் நகங்கள் வைத்தே கண்டுபிடிக்கலாம் எப்படி

நகங்களில் உண்டாகும் மாற்றங்கள், தோற்றம், நிறம் மாறுதல், நகம் வலுவிழந்து போவது போன்றவற்றை வைத்து உங்கள் உடலில் எந்த உறுப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறியலாம்.

** நகம் குழி போன்று காணப்படுவது 

ஸ்பூன் குழி போல நகம் உள்வாங்கி காணப்படுவது, இரும்புச்சத்து குறைபாடு, இரத்தசோகை போன்றவற்றின் அறிகுறியாக கருதப்படுகின்றன. மேலும், இது இதய நோய்கள் மற்றும் தைராய்டு சுரப்பிக் குறைபாட்டின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.

** நகம் குவித்து காணப்படுவது

தொடர்ந்து வருடக்கணக்கில் நகம் சற்று மேடு போல குவிந்து காணப்படுவது, இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக உள்ளதையும், நுரையீரல் நோய் உண்டாவதையும் வெளிபடுத்தும் அறிகுறிகள் ஆகும். மேலும், இது குடல், இதயம், கல்லீரல் போன்ற நோய்களுக்கான அறிகுறியாகவும். 

** நிறம் வேறுபடுதல்

உங்கள் நகத்தில் பெரும்பாலும் வெள்ளையாகவும், நக நுனியில் மட்டும் பின்க் நிறத்தில் நேரோ (Narrow) போன்று வளைந்து காணப்படுவது, கல்லீரல் நோய், இதய செயற்திறன் குறைபாடு, சிறுநீரக செயலிழப்பு, நீரிழிவு போன்றவற்றின் அறிகுறியாகும்.

** மஞ்சள் நகங்கள்

சுவாச பிரச்சனைகள் அல்லது நாட்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி இருந்தால் இந்த மஞ்சள் நக நோய் தென்படலாம்.

** நகத்தில் பியூ வரிகள்

நகத்தின் குறுக்கே வரிகள் போன்று தோன்றுவது, நீரிழிவு, வாஸ்குலர் நோய், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, நிமோனியா மற்றும் ஜின்க் குறைபாடு போன்றவற்றின் அறிகுறியாக வெளிப்படுகிறது.

** நகத்தில் சின்ன சின்ன குழிகள் 

நகத்தில் சின்ன சின்ன குழிகள் அல்லது புள்ளிக்கள் போன்று காணப்படுவது, சொரியாசிஸ், சருமத்தில் செதில் போன்ற திட்டுகள், திசு சீர்குலைவுகள், முடி கொட்டுதல் போன்றவற்றின் அறிகுறியாக வெளிப்படுகிறது