கர்ப்பிணி பெண்களை டி.வி சீரியல் பக்கம் நெருங்க விடாதீங்க மனநல மருத்துவர் வெளியிட்ட பகீர் தகவல்

சீரியல் பக்கமே கர்ப்பிணி பெண்கள் நெருங்க வேண்டாம் என்று மனநல மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மனநல திட்டம் என்ற பெயரில் கடந்த சில நாட்களாக கர்ப்பிணிப் பெண்களுக்கான மனநலம் சார்ந்த விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

'மாவட்ட மனநலத் திட்டம்' என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மனநலம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதில் அரசுப் பள்ளி மாண மாணவியருக்கும், அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு என  அனைத்து தரப்பு மக்களுக்கும் மனநலம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்தோடு அதற்கான தீர்வுகளும் அங்கேயே செல்லப்படுகிறது.

கிராமப்புறங்களில் இருந்து வர முடியாதவர்களுக்கு அந்தந்த கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பெண்களுக்கான மனநல மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

நேற்று புதுக்கோட்டை மாவட்டம்  பரம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்களுக்கான சிறப்பு மனநல விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பெண்களிடத்தில் கர்ப்பம் தரித்தது முதல், குழந்தை பெறும்போது மனதில் ஏற்படும் பயங்கள் மற்றும் உடல் ரீதியான வேதனைகள் குறித்து கூறப்பட்டது. அதனை எப்படி திடகாத்திரமான  மன உறுதியுடன் எதிர்கொள்வது என்பது குறித்தும் விளக்கப்பட்டது.

பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் என்றாலும் மனைவியை அழைத்து வந்த கணவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மனைவி கர்ப்பம் தரித்திருக்கும் பொழுது நடந்துகொள்ளவேண்டிய வழிமுறைகள், அவர்களின் பாதுகாப்பு, குறித்து கணவர்களிடம் கூறப்பட்டது.

இறுதியாக அந்த நிகழ்வில் பேசிய மருத்துவர்,

கர்ப்பிணிப் பெண்களுக்கு மன அழுத்தம் தொடர்பான பிரச்னைகள் அதிகரித்துவிட்டன. கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள் டி.வி சீரியல்கள் பார்க்கக் கூடாது. அதனை அறவே தவிர்த்து விட வேண்டும்' என்று கூறியுள்ளார்.