பிறந்த பச்சிளங்குழந்தையை குப்பைத்தொட்டியில் வீசிய தாய் அதிர வைக்கும் காரணம்

பிறந்து 25 நாட்களே ஆன பெண் குழந்தையை தாய் குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி - வினோத்பூர் என்ற இடத்தை சேர்ந்த தாய்க்கு கடந்த 25 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில் வீட்டில் இருந்த குழந்தை காணாமல் போய்விட்டதாக குழந்தையின் தாய் மற்றும் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர் .

கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணை நடத்தி வந்தனர். பொலிஸார் குழந்தையின் தாயாரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார் அவரிடம் தீவிரமாக விசாரிக்கவே அவர் உண்மையை கூறியுள்ளார்.

அவர் கூறிய காரணம் பொலிஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்து குழந்தையை குப்பைத் தொட்டியில் வீசியதாக தெரிவித்துள்ளார். 
குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தையை உடனடியாக பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் தாயை பொலிஸார் கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.