இந்த நீரை இப்படி குடிச்சு பாருங்க ஏற்படும் மாற்றங்கள் என என்பதை பாருங்கள்

நன்றாக சாப்பிட்டு குண்டாக இருப்பவர்கள் பொதுவாக சொல்லும் ஒரு வார்த்தை’ எல்லாருமே ஒரு நாள் போகத்தான் போறோம். அதான் இருக்கிற வரைக்கும் நல்லா சாப்பிட்டு அனுபவிக்கலாம்’ என்பது.உடலுக்கு பாதகம் விளைவிப்பதை எப்படி நியாப்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த உடல், செடிகளுக்கான நல்ல நிலம் போன்றது. நல்ல மண் வளம் இருந்தால்தான் ஒரு செடி மரமாகி இயற்கையை மேலும் வாழ வைக்கும்.

அப்படித்தான் மனிதனின் உடலும். அணுக்களாலும், மூலக்கூறுகளாலும், உருவாக்கப்பட்ட இந்த உடலுக்கு நல்ல உணவை கொடுத்தால்தான் அதனை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல முடியும். அதோடு பிறந்ததன் அர்த்தம் நாம் எத்தகைய வாழ்வை வாழ்ந்திருக்கிறோம். என்பதில் அடங்கியுள்ளது.உடல் முழுவதும் நோய் வைத்துக் கொண்டு எந்த சாதனையை நீங்கள் சாதிக்க முடியும். ஆகவே உங்கல் வாழ்வின் ஆதாரமாக இருக்கும் உடலுக்கு நன்மைகளை செய்ய வேண்டுமானால், உங்கள் கை எதை சாப்பிடுகிறது என்பதில் கவனம் தேவை.

உடல் எடையைப் பற்றி அக்கறை உண்மையில் இருக்குமானால் நிச்சயம் சாப்பிடும் உணவிலும், ஆரோக்கியத்திலும் அக்கறை கொண்டிருப்பார்கள். ஆனால் மனம் போன போக்கில் வாய் ஆசைப்படுகிறதே என கண்டதையும் வயிற்றில் கொட்டி சாப்பிடுபவர்கள்தான் ஏராளம்.சரி உடல் எடை குறைக்கும் விஷயத்திற்கு வருவோம். எவ்வளவோ டயட் மற்றும் உணவுகள் உடல் எடையை குறைக்கும் என பல தெரிந்து வைத்திருப்பீர்கள்.ஆனால் நீள கத்திரிக்காய் மற்றும் எலுமிச்சை கலந்த கலவை உடல் எடையை குறைக்க உதவும் என கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதோ நீங்கள் இதைப்படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கத்திரிக்காய் மற்றும் எலுமிச்சை நீர் தயாரிக்கும் முறை :
இந்த டயட்டை நீங்கள் பின்பற்ற நினைத்தால், இதனை தயார் செய்வதற்கு சில நிமிடங்களே போதும். ஆகவே நேரத்தைப் பற்றிக் கூட நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

தேவையானவை :எலுமிச்சை சாறு – 1, நீர்- 4 கப்

தயாரிக்கும் முறை : ஸ்டெப் – 1 :
நல்ல தரமான கத்திரிக்காயை வாங்கி சுத்தமாக கழுவ வேண்டும். சமையல் சோடா கலந்த நீரில் அலசினால் அதிலிருக்கும் அழுக்கு மற்றும் கிருமிகள் அழித்துவிடும். அதன் பின் இந்த கத்திரிக்காயை சிறு சிறு சதுர சதுரமாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதன் தோலை எடுக்காமல் வெட்டிக் கொள்ள வேண்டும்

ஸ்டெப் – 2 :
ஒரு பாத்திரத்தில் நீரை நன்றாக கொதிக்க வையுங்கள். பின்னர் ஒரு ஜாரில் வெட்டிய கத்திரிக்காய் துண்டுகளைப் போட்டு அதில் இந்த கொதித்த நீரை உடனே ஊற்றி மூடி விடுங்கள். அது முழுவதும் ஆறும் வரை அப்படியே வைத்திருங்கள்.

ஸ்டெப் – 3 :
ஆறியவுடன் அந்த நீரில் ஃப்ரெஷான எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டும் அல்லது குளிர்சாதனப்பெட்டியில் வைத்து சில்லென்று ஆனவுடன் அதில் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கலாம்.

குடிக்கும் முறை :
உடல் எடை குறைக்க விரும்புவர்கள் வாரம் 3 நாட்கள் விடாமல் குறைத்தால் அற்புத பலன்கள் கிடைக்கும். உடலில் டி டாக்ஸ் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து 7 நாட்களுக்கு காலையில் வெறும் வயிற்றில் இந்த கத்திரிக்காய் எலுமிச்சை நீரை குடிக்க வேண்டும்.

நன்மைகள் :
இது உடலிலுள்ள நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றக் கூடியவை. ரத்தத்தை சுத்தகரிப்பு செய்வதில் முக்கியப் பங்கு கத்திர்க்காய் வகிக்கின்றது. அதோடு பாதிக்கப்பட்ட அணுக்களை சீர் செய்வதையும் செய்கிறது.

இதய நலன்:
இந்த நீரில் விட்டமின் ஈ அதிகம் இருக்கிறது. செல் சிதைவை தடுக்கும். இதய நலனை பாதுகாக்கும். ரத்த ஓட்டத்தை தூண்டும்.

மூட்டு வலி :
இது நீர்ப்புத்தன்மை மற்றும் யைடூரிடிக் பண்பு அதிகம் பெற்றது. திசுக்களில் தங்கியிருக்கும் நீரை வெளியேற்றி மூட்டு இணைப்புகளில் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் காக்கின்றது.

நரம்புகள் :
இது மிக அத்யாவசியமான மினரல்களான பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம் போன்றவற்றை உடலுக்கு அளிக்கின்றது. இதனால் நரம்பு மண்டலம் பலம் பெறுகிறது. மூளைக்கும் அதிக ஆற்றலை வழங்குகிறது.

பித்த நீர் சுரப்பு :
பித்த நீர் சுரப்பை இந்த கத்திரிக்காய் நீர் தூண்டுவதால், உணவுக் குடல் மற்றும் இரைப்பையில் உருவாகும் கொழுப்பு செல்களை உடைத்து முழுவதும் கிரகிக்க உதவுகிறது.

மலச்சிக்கல் :
கத்திரிக்காயில் மிக அதிக நார்ச்சத்து உள்ளது. இவை ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. குடல்களில் உருவாகும் நல்ல பாக்டீரியக்கள் வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும் மலச்சிக்கலை குணப்படுத்தும்.

ரத்த சோகை :
ரத்த சோகையால அவதிப்படுபவர்கள் இந்த கத்திரிக்காய் நீரை மருந்தாக சாப்பிடலாம். இது ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்கின்றது. சிலர் உடல் நலக் கோளாறுகளுக்காக ஆன்டி பயாடிக் எடுத்துக் கொள்வார்கள் இதனால் ரத்த சோகை உருவாகும். அவர்களுக்கும் இது நல்ல பலனைத் தரும்.

மனத் தளர்ச்சி :
சிலருக்கு வேலைப் பளு, மற்றும் குடும்ப பிரச்சனைகள் அல்லது ஹார்மோன் மாற்றங்களால் மனத் தளர்ச்சி உண்டாகும். எதிலும் ஈடுபாடில்லாமல் தீவிர மன அழுத்ததில் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் இந்த நீரை எடுத்துக் கொண்டால் மனத் தளர்ச்சியை போக்கும். நரம்புகளை ஆசுவாசப்படுத்தி நன்மைகளை அளித்திடும்.

கொழுப்பை கரைக்க :
கத்திரிக்காய் அதிக சத்துக்களை கொண்டது. கொழுப்பை வேகமாக கரைத்திடக் கூடியது. தினமும் இந்த நீரை குடித்து வந்தால் அதிகபடியான கொழுப்பு கரைந்து உடல் இளைக்க ஆரம்பிக்கும்.அதோடு நல்ல ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஆரம்பித்தால் வேகமாக உடல் எடையை குறைப்பதை காண்பீர்கள்.