5 மாற்றங்கள் புதிய கேப்டன் இலங்கை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் விவரம் உள்ளே

இந்திய அணி தனது நெடிய தென் ஆப்பிரிக்கா பயணத்தை நேற்றுடன் முடித்து. டெஸ்ட் மாட்சுகளில் தோல்வியை தழுவினாலும், ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளில் கோப்பையை வென்றது இந்திய அணி.

india

india

அடுத்ததாக இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு டி 20 போட்டிகளில் விளையாட உள்ளது. “நிதாஸ் கோப்பை” என்று அழைக்கப்படும் இப்போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்தியா. மார்ச் 6 – 18 வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்கான 15 வீரர்களின் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழு இன்று அறிவித்துள்ளது.

Rohith sarma

Rohith sharma

வீரர்கள் பட்டியல் – ரோகித் சர்மா (கே) , ஷிகர் தவான்(து.கே) , லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்ணா, மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹுடா, வாஷிங்டன் சுந்தர், யுஷ்வேந்திர சகல், அக்சர் பட்டேல், விஜய் சங்கர், சர்துல் தாக்கூர், ஜெய்தேவ் உனாத்கட், முகமது சிராஜ், ரிசப் பந்த்.

தற்பொழுது இருந்த அணியில் இருந்து 6 வீரர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. விராட்கோலி, மகேந்திர சிங் தோனி, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதில் தோணி மட்டும் தனக்கு ஒய்வு அளிக்குமாறு கேட்டுக்கொண்டதால் செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு பிசிசிஐ தானாகவே அவர்களின் பளுவை கணக்கில் கொண்டு ஒய்வு அளித்துள்ளது.

5 புதிய வீரர்கள்

Washington Sundar

முகமது சிராஜ், ரிசப் பந்த், வாஷிங்டன் சுந்தர் இந்த மூவரும் இதற்கு முன் இந்தியா அணிக்காக டி 20 விளையாடி உள்ளனர். எனினும் இந்தியா ஏ அணிக்கு சிறப்பாக விளையாடியதால் ஆல் ரௌண்டர்கள் ஆன பரோடாவின் தீபக் ஹூடா மற்றும் தமிழகத்தின் விஜய் ஷங்கர் இருவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

சினிமாபேட்டை கிசு கிசு

Vijay Shankar

விஜய் ஷங்கர் மிதவேக பந்துவீச்சாளர் மற்றும் மத்திய வரிசை பாட்ஸ்மான். மேலும் தமிழக டி 20 அணியின் தலைவரும் இவரே. ஹர்டிக் பாண்டியா இல்லாத காரணத்தால் ஆல் ரௌண்டர் ஆன விஜயசங்கருக்கு கண்டிப்பாக அணியில் விளையாடும் வாய்ப்பு உறுதி .