அம்மாவை இழந்த வருத்தத்தில் இளம் நடிகர் பட வாய்ப்புகள் குவியும் நேரத்தில் இப்படி ஒரு சோகமா

தமிழ் திரை உலகில் மெகா ஹிட் நடிகராக பிரம்மாண்ட ரசிகர்கள் கூட்டத்துடன் வலம் வருபவர் தளபதி விஜய்.ப்ரண்ட்ஸ்  படத்தில் இவரும் சூர்யாவும் இணைந்து நடித்திருந்தார்கள்..

 2001ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைபடத்தின் கதை, திரைக்கதை சித்திக்கின் இயக்கத்திலும் கோகுல் கிருஷ்ணாவின் வசனத்திலும் வெளியானது

இந்தத் திரைப்படம் ப்ரண்ட்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது

இந்த படத்தில் குட்டி விஜயாக நடித்திருந்தவர் ஜெயந்த். இவர் தற்போது கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்,  தற்போது பல குறும்படங்களில் நடித்து வருகிறார்..

இவர் பள்ளியில் படிக்கும்போதே பல திரைப்படங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து திரை உலகில் பிரபலமானார்

தற்போது பல குறும்படங்கள் இவரை தேடி வருகின்றன, இந்த சந்தோஷமான  நேரத்தில் தான், வருத்தபடகூடிய ஒரு விஷயம் நடந்துள்ளது..இந்த  சமயத்தில் தான் இவரது தாயார் மரணமடைந்துள்ளார்.

இது குறித்து ஜெயந்த்,

பல பட வாய்ப்புகள் தற்போது என்னை தேடி வருகின்றன, ஆனால் என்னுடைய அம்மாவின் பிரிவால், என்ன செய்வது என்று அறியாமல் குழம்பியுள்ளேன் என கூறியுள்ளார்