இந்த நாள் வரும்னு என் தோப்பனார் அன்றே சொன்னார் காயத்ரி ரகுராம்

சென்னை: எங்க அப்பா அன்றே சொன்னார் என்று கமல் பற்றி ட்வீட்டியுள்ளார் காயத்ரி ரகுராம்.

உலக நாயகன் கமல் ஹாஸன் நேற்று புது அவதாரம் எடுத்துள்ளார். அவரை பார்க்க கூடிய கூட்டத்தை பார்த்து பலரும் ஆடிப் போயுள்ளனர். தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்று பெயர் வைத்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அப்பா 
சிறந்த தலைவர்

கமல் சாரை பார்த்து என் தந்தை பெருமைப்படுவார். நான் முழுவதுமாக பெருமைப்படுகிறேன். நான் சிறு வயதில் இருந்தே அவரை நல்ல தலைவராக பார்க்கிறேன். கமல் அரசியல்வாதியாகும் நாள் பற்றி என் தந்தை பேசியிருக்கிறார். அவர் நல்ல தலைவராக இருப்பார். அவர் பெரிய பொறுப்பேற்றுள்ளார். அவருக்காக எப்பொழுதும் பிரார்த்தனை செய்வோம் என்று காயத்ரி ரகுராம் ட்வீட்டியுள்ளார்.


கட்சி 
ஏன்?

பாஜகவில் இருக்கும் காயத்ரி ரகுராமை கமலின் கட்சியில் ஏன் சேரவில்லை என்று நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.


பிரார்த்தனை 
அரசியல்

பிரார்த்தனை செய்வதற்கு பதில் நாம் அவர் பக்கம் நின்று அவரை ஆதரிக்க வேண்டும். பெருமைப்பட்டால் அவருடன் சேர வேண்டியது தானே என்று ஒருவர் காயத்ரியிடம் கேட்டார்.


வித்தியாசம் 
கமல் ஹாஸன்

கண்மூடித்தனமாக பின்பற்றுவது அவர் பக்கம் இருப்பது என்று இல்லை. அவர் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பிற கட்சிகளை விட வலுவாக இருக்க வேண்டும். அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வேண்டும். இது எளிது அல்ல என்பது எனக்கு தெரியும் என்று பதில் அளித்துள்ளார் காயத்ரி.