என் தம்பி இறந்துட்டான், அவன் ஹெல்மெட் அணிந்திருக்கலாம் நடிகர் ஆதி கண்ணீர்

சென்னை: என் தம்பி இறந்துவிட்டான் என்று நடிகர் ஆதி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார்.

மிருகம் படம் மூலம் கோலிவுட் வந்தவர் ஆதி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஆதி இன்னும் முன்னணி நடிகராக போராடிக் கொண்டிருக்கிறார்.

ஆதியின் உதவியாளராக பணியாற்றியவர் சதீஷ்.

சதீஷ் 
மரணம்

சதீஷ் உயிர் இழந்த செய்தியை சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் ஆதி. உன்னை வாழ்க்கை முழுவதும் மிஸ் பண்ணுவேன். நீ இல்லாமல் நான் முழுமையாக உணரவில்லை. உன் ஆத்மா சாந்தியடையட்டும் என்று ட்வீட்டியுள்ளார் ஆதி.


தம்பி 
ஹெல்மெட்

என் தம்பி சதீஷ் இறந்துவிட்டார். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர் ஹெல்மெட் அணிந்திருக்கலாம் என்று தனது ஃபேஸ்புக் பக்கதில் தெரிவித்துள்ளார் ஆதி.


நிக்கி கல்ராணி 
ஹீரோ

உங்களை எப்பொழுதுமே மிஸ் செய்வோம் சதீஷ். ஆத்மா சாந்தியடையட்டும் ஹீரோ என்று நடிகை நிக்கி கல்ராணி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


ரசிகர்கள் 
இரங்கல்

ஆதி, நிக்கி கல்ராணியின் ட்வீட், ஃபேஸ்புக் போஸ்ட்டை பார்த்த அவர்களின் ரசிகர்கள் சதீஷின் ஆத்மா சாந்தியடையட்டும் என்று தெரிவித்துள்ளனர்.