பேஸ்புக் தோழியை படுக்கைக்கு அழைத்த நண்பர் வரமறுத்ததால் நூதன முறையில் கொலை

மும்பையில் படுக்கைக்கு வர மறுத்த பெண்ணை ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பர் ஷூ லேசால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை வாஷி பகுதியைச் சேர்ந்த 20 வயதான இளம் பெண் ஃபேஸ்புக்கில் எப்போது ஆக்டிவாக இருப்பார். 

இவருக்கு நளசோபரா பகுதியைச் சேர்ந்த ஹரிதாஸ் நிர்குடே என்ற 25 வயது இளைஞர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து சில நாட்களுக்கு பிறகு இருவரும் காதலிக்க தொடங்கினர். இந்நிலையில்,  தனது அக்காவுடன் நளசோராவில் உள்ள ஃபிளாட்டில் வசித்து வந்த ஹரிதாஸ், தனது அக்கா வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த 20 வயது இளம் பெண்ணை சந்திப்பதற்காக ஃபிளாட்டிற்கு வர சொல்லியுள்ளார். 

அந்த பெண்ணும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அந்த இளைஞர் அந்த பெண்ணை பாலியல் உறவுக்கு அழைத்து வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த ஹரிதாஸ், தனது ஷூ லேசால் பெண்ணின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை தனது வீட்டிற்கு எதிரே உள்ள மாடி படியில் போட்டு சென்றுள்ளார்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இறந்தவரின் உடலை கைப்பற்று பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதைதொடர்ந்து விசாரணையில் ஹரிதாசின் வீட்டில் இருந்து அந்தப் பெண்ணின் பர்ஸ் மற்றும் செல்போன் நிர்குடேவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.