சிவக்குமாரே சொல்லிட்டார் ஆனால் சூர்யா கேட்பாரா

சென்னை: இனி ஜோதிகாவை முழுவீச்சில் நடிக்க அனுமதிப்பாரா சூர்யா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருமணம், குழந்தைகள் என்றான பிறகு ஜோதிகா நடிப்பதில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார்.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மெர்சல் 
ஜோதிகா

ஜோதிகாவை ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க அவரது வீட்டார் விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இதனால் தான் அவர் மெர்சல் படத்தில் நடிக்க மறுத்தார் என்றும் செய்திகள் வெளியாகின. மேலும் சொந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டுமே ஜோதிகா படம் பண்ண வேண்டும் என்று குடும்பத்தார் தெரிவித்ததாகவும் பேசப்பட்டது.

 

முழுவீச்சு 
குடும்பம்

ஜோதிகா முழுவீச்சில் நடிக்க விரும்புவதாகவும், ஆனால் அவரது குடும்பத்தாருக்கு அதில் இஷ்டம் இல்லை என்றும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நாச்சியார் படம் வெளியாகி ஜோதிகாவுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது.

 

சூர்யா 
சிவக்குமார்

நாச்சியார் படம் பார்த்த மாமனார் சிவக்குமார் கூறியிருப்பதாவது, 'உண்மையாகவே ஜோதிகாவின் புதியதொரு முகத்தைதான் கண்டு பிரமித்தேன். சூப்பர் போலீஸாக எப்படி நடிக்க வேண்டும் என்று சிங்கத்துக்கே பாடம் எடுத்துள்ளார். (பெண் புலியை வீட்டிலேயே கட்டி வைக்காதீங்க சூர்யா... )' என தெரிவித்துள்ளார்.

 

அனுமதி 
நடிப்பு

மாமனாரே சொல்லியாச்சு இனி ஜோதிகா முழுவீச்சில் நடிக்க சூர்யா அனுமதி அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்ததாக வித்யா பாலன் நடிப்பில் ஹிட்டான தும்ஹாரி சுலு இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் ஜோதிகா.