தமிழ் பிக்பாஸ் சீசன் 2 ஆரம்பம் எப்போது யார் யார் பங்கேற்க போகிறார்கள் விபரம் உள்ளே

ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை ஓட்டுமொத்தமாக 100 நாட்கள் இளசுகள் முதல் பெருசுகள் வரை மிகவும் கவர்ந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் எப்போது ஆரம்பமாகவுள்ளது என்ற விபரம் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகவுள்ளது பிக்பாஸ் சீசன் 2.

இதற்க்கான போட்டியலார்களை தேர்வு செய்யும் பணிகளை துரிதமாக முடிக்கிவிட்டுள்ளது விஜய் டிவி நிர்வாகம். பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டால் லைம் லைட்டிற்கு வந்து விடலாம் என்று மார்கெட் காலாவதியாகி கிடக்கும் நடிகர் , நடிகைகள் ஆர்வம் காட்டுகின்றார்களாம்.

முதல் சீசனில் தேடி தேடி ஆள் பிடித்த நிர்வாகம். இப்போது, யாரை தேர்வு செய்யலாம் என குழப்பத்தில் உள்ளது. பல பிரபலங்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டுவதே இதற்கு காரணம்.

முதற்கட்ட மாக கிடைத்த தகவலின் படி, நடிகை மும்தாஜ் மற்றும் நடிகை சினேகா ஆகிய இருவரும் பிக்பாஸ் சீசன் 2-வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம் உள்ளது என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.