விஸ்வாசம் படத்தின் வில்லன் இவர் தான் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் அஜித் – இயக்குனர் சிவா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகவுள்ள படத்தின் தலைப்பு விஸ்வாசம். இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்கவுள்ளார். விவேகம் படத்தை தயாரித்த சத்யாஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தை தயாரிக்கவுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் வில்லன் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கவனே அஜித்துடன் மங்காத்தா படத்தில் நடித்திருந்த நடிகர் அர்ஜுன் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. அக்ஷன் கிங் அஜித்திற்கு வில்லனான விஷயம் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது