சிறு பிழையால் எசக்கப்பிசக்க அர்த்தம் மாறி போன விளம்பர பலகைகள்

 உலகின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் சில கேலியான விளம்பர பலகைகள்.

விளம்பரம்ங்கிறது ரொம்ப அழகானது. ஆனா, இன்னைக்கி இயங்கிட்டு இருக்குற விளம்பர உலகத்துல அழகை காட்டிலும் வக்கிரமும், கவர்ச்சியும் தான் இருக்கு. பர்ஃபியூம்ல இருந்து உள்ளாடை விளம்பரம் வரைக்கும் எல்லா விளம்பரத்துலையும் கவர்ச்சி. 15 வயசு பையனோட அம்மா அழகா வடிவா தான் இருக்கனுமா? குழந்தை பெற்ற பிறகு உடல் எடை கூடாமல் இருப்பது அதிசயமாக தான் பார்க்க வேண்டுமா? அல்ல உடல் எடை கூடினால் அசிங்கமா என்ன? மாநிறமாக இருந்தால் அவன் / அவள் தைரியம் இல்லாமல் போய்விடுவார்கள் என்று கூறுவது எல்லாம் எவ்வளவு பெரிய அபத்தம்.

ஒருபக்கம் இப்படி சீரியசாக நாம் பார்க்க வேண்டிய விளம்பர தவறுகள் இருக்கும் போது. விளம்பர பதாகைகளில் சிறுசிறு எழுத்து பிழைகள் மூலமாக அபத்தமான அர்த்தங்கள் உண்டாக்கிய நிகழ்வுகளும் ஆங்காங்கே காணப்படுகிறது. அப்படியான பிழையான விளம்பர பதாகைகள்...

இருபொருள்!

எரக்ஷன் என்பதை கட்டிட வேலைகளில் ஒரு பகுதியையும் குறிக்கும். ஆண்களின் வீரியத்தையும் குறிக்கும். இங்கே பெங்களூரு மெட்ரோ பணியிடத்தில் எல்.அன்ட்.டி கட்டுமான நிறுவனம் வைத்த எச்சரிக்கை பலகை கட்டிட வேலையை குறிப்பிட்டாலும், நம்ம பயலுக இதை இரண்டாவது பொருளில் தான் பார்க்கிறார்கள்.

வேற பேரே கிடைக்கலையா...

அழகு நிலையமாகவே இருந்தாலும் கூட வேறு பெயரே இவர்களுக்கு கிடைக்கவில்லையா என்று தான் தோன்றுகிறது. இதற்கான பொருள் என்னவென்று வயது வந்த ஆண்கள் அனைவருக்கும் தெரியும். கைத்தட்டுவதை மலையாள மொழியில் கூறும் போது, தமிழில் நம் ஆட்கள் இரட்டை அர்த்தமாக வேறு மாதிரி புரிந்துக் கொண்டு சிரிப்பது உண்டு. அதுவும், இதுவும் ஒன்று தான். (என்ன கொடுமை சார் இது!)

இதுக்கு அதுவே பரவாயில்ல...

ஹேன்ட் ஜாப் கூட பரவாயில்ல. இவருக்கு சொந்த பெயர்லயே யாரோ செய்வினை செஞ்சு வெச்சிருக்காங்க. அட்லீஸ்ட் ஆங்கிலதுள்ள எழுதும் போது நியூமராலஜி பார்த்து ஸ்பெல்லிங் ஆவது மாத்தியிருக்கலாம். இதுக்கான அர்த்தம் எல்லாம் எங்கயும் சொல்லவும் முடியாது, எழுதவும் முடியாது.

குழப்பமா இருக்கா?

ஒரே ஊருக்கு மூணு வழி இருக்கா, இல்ல ஒரே பேருல மூணு ஊரு இருக்க..?!?! ஒரு குழப்பமா இருக்குல. நம்ம ஊருலயும் சில இடங்கள்ள இப்படி பார்க்க முடியும். பாளையும், புதூர்ன்னு பொதுவான பேரு இருக்கும். ஆனா, அதுக்கு முன்னாடி இனிஷியல் மாதிரி வெவ்வேறு எழுத்து வெச்சிருப்பாங்க. ஊருக்கு புதுசா வரவங்க... அவங்க போக வேண்டிய ஊருக்கு போகாம, வேற ஊருக்கு போயிடுவாங்க.

சீமானுக்கு என்ன ஆச்சு...?

அது சீமான் (Seman) இல்ல தம்பி சீமன் (Semen). அதாவது ஆங்கிலத்துல விந்தினை Semen என்றும் sperm என்றும் கூறுவதுண்டு. இவர்கள் Semen என்பதை தான் Seman என்று எழுதி வைத்துள்ளனர். நல்ல வேளை இந்த போர்டு நம்ம ஊருல இல்ல. இல்லைனா நம்ம அண்ணன் சீமான் செம்ம கடுப்பாயிருப்பார்.

பாத்து...

Prosperous என்பதை தான்... Phosphorus என்று தவறாக எழுதி வைத்துள்ளனர் இந்த புத்தாண்டு வாழ்த்து பதாகையில். ஏம்பா வெயில்ல phosphorus திகுதிகுன்னு எரியும் பரவாயில்லயா? என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா...

எப்படி பார்த்துட்டு மட்டும் போறதா...

போகுற போக்க பார்த்தா... விலைவாசி உயர்வு காரணமா நிஜமாவே காய்கறி, பழங்கள் எல்லாம் சும்மா பார்த்துட்டு வரவே காசு கொடுக்க வேண்டிய நிலைமை வரும் போல. இந்த கடைக்காரர் ஒரு தீர்கதரிசி போல... அதான்.. இந்திய பொருளாதார நிலைய புரிஞ்சுக்கிட்டு Vegetable ஜூஸ்ங்கிறத... Visitable ஜூஸ்ன்னு எழுதி வெச்சிருக்காரு. நீங்க எல்லாம் நல்லா வரணும் சார்!

அது Porn இல்லப்பா....

ஆக்ஸிடெண்ட்டா பார்ன் துறைக்குள்ள போனவங்க கூட இருக்காங்க... ஆனா, இப்படி ஒரு ஆக்ஸிடெண்ட் பார்ன் ஏரியா யாரும் பார்த்திருக்க மாட்டாங்க. ஏனுங்க தம்பி அது Accident Porn Area இல்லைங்க... Accident Prone Area. இங்கிலீஷ் வரலன்னா என்ன? அழகா தாய்மொழியில எழுதி வெச்சுட்டு போக வேண்டியது தான...

பலே.. பலே!

கம்ப்யூட்டர் செண்டர் வச்சிருக்கன்னு தான் பேரு... ஷிஃப்ட்டுக்கும், ஷிட்டுக்கும் கூட ஸ்பெல்லிங் தெரியலன்னா... எப்படிங்க நீங்கள் கம்ப்யூட்டர் கிளாஸ் மட்டும் சரியா சொல்லி தருவீங்க... இதுல பேரு மட்டும் நல்ல சிறப்பா இந்தியன் இன்ஸ்டிடியூட் கம்ப்யூட்டர் டெக்னாலஜின்னு ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் ரேஞ்சுக்கு வெச்சிக்கிறது!