அஜீத் பிரபுதேவா அடிக்கடி சந்திக்கும் மர்மம் என்ன

அஜீத்திற்கும் அரசியலுக்கும் முடிச்சு போட்டு ‘அஸ்ட்ராலஜர்கள்’ ஒருபுறம் பீதி கிளப்பி வருகிறார்கள். கோடம்பாக்க ஜோதிடர் ஒருவர், ‘அஜீத் இன்னும் மூன்று படங்களில் மட்டும்தான் நடிப்பார். அதற்கப்புறம் அரசியல்தான்’ என்கிறார் எலுமிச்சம் பழத்தை நசுக்கிக் கொண்டே!

இப்படி தானா உருள்ற தேரை, முட்டு சந்தில் நிறுத்தி முணுமுணுக்க வைப்பதில் அவர்களுக்கு என்ன திருப்தியோ… விடுங்கள்! ஆனால் அஜீத் இந்த பரபரப்பு எதையும் காதில் போட்டுக் கொண்டது போல தெரியவில்லை. ‘விஸ்வாசம்’ படத்திற்கு பின் தனது அடுத்த படத்தையும் இப்பவே தீர்மானித்துவிடுகிற விஷயத்தில் வேகம் காட்ட ஆரம்பித்துவிட்டார்.

விஜய்யை வைத்து ‘போக்கிரி’யை இயக்கிய பிரபுதேவா, தனது சாதனையை விஜய்யோடு முடித்துக் கொள்ளாமல் அஜீத்தையும் டச் பண்ணுகிற ஆர்வத்தில் இருக்கிறார். அது தொடர்பான சந்திப்புகள் அடிக்கடி நிகழ ஆரம்பித்திருக்கிறதாம்.

சொல்ல முடியாது. ‘விஸ்வாசம்’ பாதி ஷுட்டிங் முடிவதற்குள் இந்தப்பட அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறது கோடம்பாக்கத்தின் அதி முக்கிய சோர்ஸ்!