கேன்சர் கட்டிகளை அழிக்கும் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

நியூயார்க்: கேன்சர் கட்டிகளுக்கு செல்லும் ரத்தத்தை தடுத்த நிறுத்துவதன் மூலம் கேன்சர் செல்களை அழிக்கும் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்து அமெரிக்க மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர். இருதய நோய்க்கு அடுத்தபடியாக அதிக உயிழப்புகளை ஏற்படுத்தும், புற்று நோய்க்கு கீமோதெரபி, அலோபதி போன்ற பல மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டாலும் முழுமையாக குணப்படுத்த இன்றளவும் இயலவில்லை. 

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்துள்ளனர். அதனை எலியின் உடலில் பரிசோதித்து வெற்றி பெற்றதாக அவர்கள் கூறியுள்ளனர். இந்த புதிய சிகிச்சையின்படி, முதலில் புற்றுநோய் கட்டிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். உடலில் அடிப்பட்டபோது ரத்தம் வெளியேறுவதை தடுக்க கொடுக்கப்படும் மருந்துகள் இந்த சிகிச்சை முறையில் பயன்படுத்துகின்றன. அவை டி.என்.ஏ. நிறைந்த நானோ ரோபோட்டுகள் மூலம் செலுத்தப்பட்ட உடன் ரத்த ஓட்டம் நிறுத்தப்படும்.