காதலர் தின பரிசு கடைக்கு இவர்களுடன் வந்தால் இலவசமாம் அட்டகாச அறிவிப்பு

நாடு முழுவதும் இன்று காதலர் தினம் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு அசத்தல் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதுமே காதலர் தினமானது பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக காதலர் தினத்தன்று சென்னை மெரினா கடற்கரை, பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் மால்களில் காதல் ஜோடிகளின் கூட்டம் தான் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. என்னவென்றால் ஒரு கடைக்கு வெளியே வைக்கப்பட்டுள்ள போர்டில் காதலர் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அது மட்டுமல்லாமல் கேர்ல் பிரண்டுடன் வந்தால் 20 சதவீதம் ஆஃபர் என்றும், மனைவியுடன் வந்தால் 45 சதவீதம் ஆஃபர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவரையும் ஒரேநேரத்தில் சேர்த்து அழைத்து வந்தால் இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் கீழே டெர்ம்ஸ் அன்ட் கண்டிஷன்ஸ் அப்ளை என்றும் பதிவிடப்பட்டுள்ளது. இவ்வாறு எழுதப்பட்டுள்ள இந்த போர்டு வைக்கப்பட்டிருப்பது ஹோட்டலுக்கு வெளியிலா அல்லது துணிக்கடைக்கு வெளியிலா என்பது தெரியவில்லை. 

இந்த போர்டு எங்கு வைக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் தெரியவில்லை. ஆனால் இந்த புகைப்படம் மட்டும் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.