எங்க வீட்டில் நான் தான் குள்ளம்: ஃபேமிலி போட்டோ வெளியிட்ட குஷ்பு

சென்னை: தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் குஷ்பு.

நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்புவுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் அம்மா குஷ்புவை போன்றும், இளைய மகள் தந்தை சுந்தர் சி.யை போன்றும் இருக்கிறார்கள்.

மகள்கள் இருவரும் தந்தையை போன்று நல்ல உயரம். தந்தை, மகள்கள் சேர்ந்து நின்றால் குஷ்பு மட்டும் தான் உயரம் குறைவாக இருப்பார். இந்நிலையில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை குஷ்பு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

புகைப்படத்தை வெளியிட்டு அவர் கூறியிருப்பதாவது,

என் உயர்ந்த உலகத்தில் நான் தான் குள்ளம் என்று தெரிவித்துள்ளார். மகள்கள் வளர்ந்துவிட்ட பூரிப்பில் உள்ளார் குஷ்பு. அவ்வப்போது தனது செல்ல மகள்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார் அவர்.