முதல் பந்தில் சிக்ஸர் டுத்த பந்தில் பிறப்புறுப்பில் அடி ரோஹித்-ரபாடா மோதல்

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி பேட்டிங் ஆடிவருகிறது.

6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-1 என இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. தொடரை தீர்மானிக்கும் முக்கியமான போட்டி போர்ட் எலிசபெத்தில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

 

 

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் மெதுவாக ஆடினாலும் மூன்றாவது ஓவருக்கு மேல் இருவரும் அடித்து ஆட தொடங்கினர். அதிலும் தவான் எல்லா பந்துகளையும் பவுண்டரிக்கு அனுப்புவதிலேயே குறியாக இருந்தார். தவான் எதிர்கொண்ட பெரும்பாலான பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார். ஆனால் 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா பவுலிங்கில் தவான் பெவிலியன் திரும்பினார்.

 

 

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளில் வெறும் 40 ரன்கள் மட்டுமே எடுத்து திணறிவந்த ரோஹித், இந்த போட்டியில் சற்று நிதானமாக ஆடினார். 4 போட்டிகளில் 3 முறை ரபாடாவின் பந்துவீச்சில் அவுட்டாகியுள்ளார் ரோஹித்.

 

 

நடப்பு தொடரில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் என ரோஹித் ஆடியுள்ள 8 இன்னிங்ஸ்களில் 6 முறை ரபாடா பந்துவீச்சில் அவுட்டாகியுள்ளார்.

இந்த முறையும் ரோஹித்தின் விக்கெட்டை வீழ்த்த ரபாடா ஆர்வம் காட்டினார். ஆனால், மிகவும் கடினமாக ஆடிய ரோஹித், வழக்கம்போல இந்தமுறை விக்கெட்டை பறிகொடுக்கவில்லை.

 

 

இதற்கிடையே ரபாடா வீசிய 6வது ஓவரின் 4வது பந்தை இறங்கிவந்து சிக்ஸருக்கு அனுப்பினார் ரோஹித். அதற்கு அடுத்த பந்தே ரோஹித்தை நோக்கி ரபாடா வீச, அந்த பந்து ரோஹித்தின் அடிவயிற்றுக்கு கீழே அவரது பிறப்புறுப்பில் அடித்தது. இதனால் சிறிது நேரம் வலியால் துடித்த ரோஹித், கார்டை கழட்டி சற்று நேரம் வலியை ஆற்றிவிட்டு கார்டை வைத்து ஆடத்தொடங்கினார்.

தென்னாப்பிரிக்க தொடரில் இதுவரை சோபிக்காத ரோஹித், இன்று பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்