கமலை இந்த உருவத்தில் வரைந்தது பிரபல தொகுப்பாளினியா என்ன செய்கிறார் தெரியுமா

ஒரு கால கட்டத்தில் பிரபல தொகுப்பாளினியாக இருந்தவர் ஐஸ்வர்யா. நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த இவர், அதனையடுத்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக சேர்ந்தார்.

இவர் பேசும் தமிழுக்கும், இவரது அழகுக்கும், நடனத்திற்கும் ரசிகர்கள் எக்கச்சக்கம். இவர் தொகுப்பாளினியாக மட்டுமே இல்லாமல் சீரியலிலும் கால் பதித்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இவர் என்ன ஆனார் என்று தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் தொகுப்பாளினி ஐஸ்வர்யா தற்போது எங்குள்ளார் என்பது பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

திருமணத்திற்கு பின்னர் தனது கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார் ஐஸ்வர்யா. அங்கு நடைபெற்ற அழகி போட்டியில் மிஸஸ் இந்தியா யுஎஸ்ஏ என்ற பட்டத்தையும் வென்றிருக்கிறார். 

திருமணத்திற்கு பின்னர் மிகவும் குண்டாக ஆன இவர் கடுமையாக உடற்பயிற்சி செய்து பின்னர் பழைய நிலைக்கு திரும்பி அழகி போட்டியில் கலந்து பட்டத்தையும் வென்றிருக்கிறார்.

இந்த நிலையில் ஹார்வர்டு பல்கலையில் உரையாற்றுவதற்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் கமலை, ஐஸ்வர்யா நேரில் சந்தித்திருக்கிறார்.

அப்போது அவர் தான் வரைந்த ஓவியத்தில் கமல்ஹாசனிடம் காட்டி அவரது கையொப்பத்தையும் பெற்றிருக்கிறார். முருகன் வேடத்தில் வைரலான கமல்ஹாசனை வரைந்ததே இவர்தான்.

அதோடு ஐஸ்வர்யா எதற்காக கமலை இப்படி வரைந்தார் என்பதற்கான காரணத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.