பாலா ஏன் நாச்சியார் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என்று தெரியுமா

சென்னை: நாச்சியார் படம் ரிலீஸாக 3 நாட்களே உள்ள நிலையில் இசை வெளியீட்டு விழா ஏன் நடத்தப்படவில்லை என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

பாலா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், ஜோதிகா நடித்துள்ள நாச்சியார் படம் வரும் 16ம் தேதி ரிலீஸாக உள்ளது. படத்தை தியேட்டரில் பார்க்குமாறு ஜி.வி. பிரகாஷ் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

படத்தின் டீஸரில் ஒரேயொரு வசனத்தை மட்டும் வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் பாலா.

ஜோதிகா 
கெட்ட வார்த்தை

நாச்சியார் டீஸரில் ஒரேயொரு வசனம் தான் அதுவும் போலீஸ் அதிகாரியான ஜோதிகா பேசும் 'தே' வார்த்தை. அந்த வார்த்தையால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.

 

இசை வெளியீடு 
பாடல்கள்

நாச்சியார் படம் வெளியாக 3 நாட்களே உள்ள நிலையில் இன்னும் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லையே என்று ஆளாளுக்கு பேசிக் கொள்கிறார்கள்.

 

பாட்டு 
இல்லை

பாலா ஏன் இசை வெளியீட்டு விழா நடத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இளையராஜா இசையில் படத்தில் ஒரேயொரு பாட்டு தானாம். அதை நேரடியாக படத்திலேயே பார்த்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார்களாம்.


ஆவல் 
இளையராஜா

அந்த ஒரு பாடல் என்னவாக இருக்கும், இளையராஜா இசையில் நிச்சயம் பட்டையை கிளப்பும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். படத்தை பார்த்தால் தான் கெட்ட வார்த்தை பேசியது ஏன் என்பது புரியும் என ஜோதிகா தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.