நிர்வாண படம் கேட்ட ஆணுக்கு செருப்படிக்கும் மேலான தண்டனையை கொடுத்த இளம்பெண்

நீண்டநெடுங்காலமாக பெண்களை வீக்கர் செக்ஸ் என்ற வட்டத்திற்குள் வைத்து பார்த்து வருகிறது இந்த சமூகம். அவர்களிடம் என்ன வேண்டுமானாலும், கேட்கலாம், அவர்களை எப்படி வேண்டுமானாலும் தாக்கலாம், நினைக்கும் போதெல்லாம் அனுபவிக்கலாம் என்பதே பெரும்பாலான நாட்டில் வசிக்கும் பலதரப்பட்ட ஆண்களின், சமூகங்களின் நினைப்பு.

இதை எல்லாம் தாண்டி ஒரு பெண் அந்த வட்டத்தை விட்டு வெளியே வந்தால், அவளை மாபங்கப்படுத்திவிட்டால் போதும், அவர் மீண்டும் சிறைப்பட்டு விடுவாள் என்ற எண்ணம் ஆழமாக ஆண்கள் மனதில் பதிந்திருந்தது. ஆகையால் தானோ என்னவோ, இன்னமும் கூட பெண்களிடம் எளிதாக சமூக தளங்களில் பழகி, ஜொள்ளுவிட்டு, அவர்களிடம் நிர்வாண படம் கேட்பது மிக இயல்பாக இருந்து வருகிறது.

இப்படியான நிகழ்வுகள் அனுதினமும் நடந்து வருகிறது. பல பெண்கள் இப்படியாக யாரேனும் தங்களிடம் பேசினால் அவர்களை பிளாக் செய்து தப்பித்துக் கொள்கிறார்கள். வெகு சில பெண்களை அவர்களை ஏமாளி ஆக்கி, வெளியுலகம் அவர்களை கண்டு வாய்விட்டு சிரிக்கும் படியாக தண்டனை கொடுத்து வெளுத்துவாங்குகிறார்கள்.

அப்படியான ஒரு நிகழ்வு தான் இதுவும்...

நிர்வாண படம்...

ஒரு ஆண், இந்த பெண்ணிடம் நான் உன்னை ஆடைகள் இன்றி காண வேண்டும் என்று பல் இளிக்கும் ஸ்மைலையுடன் செய்தி அனுப்பியுள்ளார்,. இந்த பெண்ணும், ஒரு நொடி காத்திருக்கவும் என்று பதில் கூறிவிட்டு, புகைப்படம் பதிவேற்றம் ஆவது போன்ற படத்தை அனுப்பியுள்ளார்.


லூசுப்பய!

அந்த பெண் அனுப்பியது புகைப்படம் பதிவேற்றம் ஆவது போன்ற புகைப்படமே தவிர, அவரது நிர்வாண படம் என்பது அறியாத அந்த கோமாளி, மீண்டும், மீண்டும் ஆண்ட பெண்ணிடம்... புகைப்படம் லோட் ஆகிராதே தவிர பதிவிறக்கம் ஆகவில்லை. மீண்டும் அனுப்பு என்று கேட்டுள்ளான்.

 

மீண்டும், மீண்டும்..

அவனும் ஓயாமல் இந்த பெண்ணிடம் நிர்வாண படம் கேட்க, இந்த பெண்ணும் மீண்டும், மீண்டும் அதே பதிவிறக்கும் ஆவது போன்ற புகைப்படத்தை அனுப்பி கடுப்பேற்றியுள்ளார். ஆனால், கடைசி வரையிலும் அந்த கோமாளி ஆண் அந்த பெண் அனுப்புவது பதிவிறக்கம் ஆவது போன்ற இலட்சினை படமே தவிர, நிர்வாண படம் அல்ல என்பது அறியாமல் முட்டாளாகி போனான்.

 

வந்துச்சா...

மேலும், அந்த பெண் அந்த பதிவேற்றம் ஆகும் படத்தை அனுப்பிவிட்டு, படம் வந்துவிட்டதா என்று கேட்க, அந்த கோமாளி ஆண், என் மொபைல் தான் பிரச்சனை, நான் புதிய போன் வாங்க வேண்டும் போல என்று பல் இளித்து ஸ்மைலி போட்டு தன்னை தானே முட்டாளாக்கிக் கொண்டான்.

 

ட்விட்டரில் கலாய்

சாட்டிங்கில் கலாய்த்தது போதாது என, அவனது முட்டாள் தனத்தை உலகம் அறிய வேண்டும் என்று நினைத்த அந்த பெண், அந்த சாட்டிங் ஸ்க்ரீன்ஷாட்டுகளை தனது ட்விட்டர் பதிவில் போஸ்ட் செய்து நடந்த சம்பவங்கள் குறித்து கூறியிருந்தார்.

கடைசி வரை நான் அனுப்பியது வெறும் லோடிங் போட்டோ என்பதை கூட அறியாத அவன் எத்தனை பெரிய அறிவாளியாக இருக்க வேண்டும் என்று நகைத்தப்படி கூறியிருக்கிறார் அந்த புத்திசாலி இளம்பெண்.

 

இப்படி தான் இருக்க வேண்டும்!

வெறுமென ப்ளாக் செய்வதற்கு பதிலாக, அந்த ஆண் எவ்வளவு கேவலமானவன் என்பதை இப்படி ஸ்க்ரீன்ஷாட் எடுத்து பகிர்வது தான் தக்க பதிலடியாக இருக்கும். இதன் மூலம் தன் மானம் போகும் என்பதை பிற நபர்கள் அறிவார்கள். அவனும், பின்னாட்களில் வேறு எந்த பெண்ணிடமும் வாலாட்ட மாட்டான்.

 

அதுக்கும் மேல...

இப்படியான ஆட்கள் நேரடியாக கேட்டால் தானே சூழ்ந்திருக்கும் மக்கள் தங்களை தாக்குவார்கள். நான்கு சுவர்களுக்குள் அமர்ந்துக் கொண்டு பெண்களிடம் இப்படி கொச்சையாக பேசுவதால் எந்த பிரச்சனையும் வராது என்ற தைரியத்தால் தான் மிக எளிதாக பெண்களை இப்படி அணுகுகிறார்கள்.

 

முட்டாளாக்க வேண்டும்!

ஆனால், இங்கேயும் பிரச்சனை வரும்... அதன் தாக்கம் பெரிதாக இருக்கும் என்று அறிந்தால்... இப்படிப்பட்ட ஆண்கள் இனிமேல் எந்த பெண்ணிடமும் தவறான நோக்கத்தில் அணுகவும் மாட்டார்கள், பேசவும் மாட்டார்கள்.