இதுவரை இல்லாத கவர்ச்சி தமிழில் மண்ணை கவ்விய படத்தின் தெலுங்கு ரீமேக்கில் காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வாலின் மார்க்கெட் கிட்டதட்ட தரை தட்டிவிட்டது. இனிமேல், முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு குதிரை கொம்புதான் என்கிற நிலை.

தற்போது, “அமர் அக்பர் அந்தோணி” என்ற தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார் காஜல் அகர்வால். இந்த படம் நேரடி தெலுங்கு படம் தான் என்றாலும், ஏற்கனவே தமிழில் வெளியாகி மண்ணை கவ்விய “அன்பானவன் அடங்காதவன் அசராதவன்” படத்தின் ரீமேக் தான் இது.

இந்த படத்தின் ப்ரொட்யூசர் பல கோடிகளை இழந்து மீடியா, மீடியாவாக சென்று புலம்பி வந்த விஷயம் எல்லோரும் அறிந்ததே. இந்த படம் தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றார் போல சிறு சிறு மாற்றங்களுடன் உருவாகவுள்ளது. ஆனால், முதல் பாகம், இரண்டாம் பாகம் என்றெல்லாம் கிடையாது. ஒரே பாகம் தான். படத்தின் முழுக்கதையும் இயக்குனர் ஆதிக் ரவிசந்தர் விற்றுவிட்டார்.

ஹைலைட் என்னவென்றால், இந்த படத்தில் தமன்னா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார். இதுவரை இல்லாத கவர்ச்சியை இந்த படத்தில் காட்டி நடிக்கவுள்ளார் என்று கூறுகிறார் “அமர் அக்பர் அந்தோணி” படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள்.

Image result