பெருசு சிறுசு எல்லாம் முக்கியமில்லை எனக்கு இது தான் முக்கியம் திரிஷா

கடந்த 15 வருடங்களாக திரையுலகில் முன்னணியில் இருந்து வருபவர் நடிகை திரிஷா. நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான ஹே ஜூடு திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இது அம்மணிக்கு ஒரு எனர்ஜி டானிக்காக அமைந்துள்ளது. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் திரிஷாவிடம்.  ஹே ஜூடு வெற்றி குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ” எனக்கு சிறிய ஹீரோ, பெரிய ஹீரோ என்பதை பற்றியெல்லாம் கவலை இல்லை. என்னை பொறுத்தவரை கதை சரியாக இருக்க வேண்டும். நல்ல கதை அமைந்தால் நான் யாருடன் வேண்டுமானாலும் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.” சிவகார்த்திகேயனுடன் நடிப்பீர்களா..? என்ற கேள்விக்கு கண்டிபாக நடிப்பேன் என பதிலளித்துள்ளார்.