கண்ணை மூடிக்கொண்டு பயணம் செய்யும் தமிழக மக்கள் இதே நிலை நீடித்தால் ஆண்டவனால் கூட

தமிழகத்தில் உள்ள, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்,முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவின் பிறந்த நாளான,வரும் பிப்ரவரி 24 ஆம் தொடங்கப்பட உள்ளது. இத் திட்டத்தின் கீழ், தமிழக அரசின் மானிய உதவியுடன் கூடிய இருசக்கர வாகனத்தை பெற இதுவரை 3 லட்சத்து 19 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். 

தமிழக அரசு சார்பில், இதற்கான விண்ணப்ப வினியோகம் கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கியது.இதனை அடுத்து நேற்று மாலையுடன் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் முடிந்த நிலையில்,மாநிலம் முழுவதும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3 லட்சத்து 19 ஆயிரத்து 315 பேர், விண்ணப்பித்துள்ளனர்.

இதில்,அதிகபட்சமாக சென்னையில் இருந்து 35 ஆயிரத்து 28 பேரும், குறைந்தப்பட்சமாக நீலகிரி மாவட்டத்தில் இரண்டாயிரத்து 308 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.