மூக்கு புடைக்க உண்டு ஆடி அசைந்து வந்த அமைச்சர்கள் அலங்கோலப்படுத்திய பொதுமக்கள்

கோவை மாவட்டத்தில்வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் உழவர் தின விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவிற்கு வர வேண்டிய அமைச்சர்கள் மூன்று பேர் 3 மணி நேரம் தாமதமாக வந்ததால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகி எழுந்து சென்று விட்டனர்.

கோவையில் இன்று நடைபெற்ற உழவர் தின நிகழ்ச்சிக்கு கோவை மற்றும் அதனை சுற்றி உள்ள கொங்கு மண்டல விவசாயிகள் நேற்று முதலே காத்திருந்து கலந்து கொண்டனர்.

இதில் பெரும்பாலான  விவசாயிகள் 50 வயதைக் கடந்தவர்களாகவே இருந்தனர். இன்று காலை பத்து மணிக்கு தொடங்க வேண்டிய விழா அமைச்சர்களால் மதியம் ஒரு மணிக்கு தான் தொடங்கப்பட்டு இருக்கிறது.

ஒரு தனியார் விழாவில் கலந்து கொண்ட பின்னர் தான் விவசாயிகளை பார்க்க வந்துள்ளனர்.

இதனால் விழா அரங்கத்தில் கூடியிருந்த பாதிக்கும் மேற்பட்ட விவசாயிகள் அரங்கை விட்டு வெளியேறத் தொடங்கினர்.

அவர்களை நிறுத்திவைக்க எவ்வளவோ முயன்றும் அமைச்சர் வருவதற்குள் பாதிக்கும் மேற்பட்டோர் எழுந்து சென்று விட்டனர்.

அமைச்சர்களின் இந்த மெத்தன போக்கினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் , பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், மாவட்ட ஆட்சித் தலைவரும் கூட காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

தமிழக அமைச்சர் ஒருவர், தனியார் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக அரசு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு தாமதாமாக வந்தது, பலரிடமும் அதிருப்தியை ஏற்படுத்தியது.