ஜெ.தீபா வீட்டில் ஐடி ரெய்டு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சகோதரர் மகள் ஜெ. தீபா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை ந‌டத்தி வருகின்றனர். 

சென்னை தியாகராய நகரில் வசித்து வருகிறார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியை அவர் நடத்தி வருகிறார். இவரது தி.நகர் வீட்டுக்கு இன்று காலை வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் வந்தார்.

அங்கு ஜெ.தீபா இல்லாத நிலையில் அவர் கணவர் மாதவன் மட்டுமே வீட்டில் இருக்கிறார். மேலும் சில வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு வந்தனர். பின்னர் அவர் வீட்டில், வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர்