கணக்கு வேம்பாய் கசக்கும் சுட்டீஸ்களுக்கு மத்தியில் இந்த சமத்துக் குட்டியின் சாதனையை பாருங்க

லண்டன் : இந்திய வம்சாவளியைச் சேர்நத் 8 வயது சிறுமி யூகேவின் மேத்லெடிக்ஸ் ஹால் ஆஃப் பேமில் மற்ற நாட்டு பிரைமரி மாணவர்களை பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளார். மேத்லெடிக்ஸ் என்பது ஆன்லைனில் நடத்தப்படும் கணிதம் தொடர்பான கடினமான கணக்குகளை தீர்ப்பதற்காக நடத்தப்படுவது.

சோஹினி ராய் சவுத்ரி பிரிட்டன் மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுடன் உலகின் மிகப் பிரபலமான கணிதப் போட்டித் தேர்வில் பங்கேற்றார். இதில் கணித புதிர்களுக்கு வேகமாகவும் துள்ளியமாகவும் தீர்வு காண வேண்டும்.

'ஆன்லைனில் கற்கும் முறை சோஹினிக்கு இந்த வாய்ப்பை அளித்துள்ளது, கணிதப் புதிர்களை தீர்ப்பதில் சோஹினி மிகவும்ஆர்வமாக இருந்ததாக' சிறுமியின் தந்தை மைனக் ராய் சவுத்ரி கூறியுள்ளார். எம்பிஏ பட்டதாரியான மைனக் அக்கவுண்டன்டாக இருக்கிறார்.

பெருமிதம் 
சோஹினியின் குடும்பத்தார் பெருமிதம்

சோஹினியின் தாத்தா டி என் ராய், ஸ்காட்லாந்து லோகோமோடிவ் பொறியாளர், இவர் இந்திய ரயில்வேயில் பணியாற்றி இருக்கிறார். சோஹினிக்கு கணித ஆர்வம் இந்த அளவுக்கு இருப்பதற்கு அவளுடைய மரபிலேயே இருப்பது தான் என்று கூறியுள்ளார்.

 

மேத்லெடிக்ஸ் என்றால் என்ன? 
மேத்லெடிக்ஸ் எப்படி விளையாடுவது

மேத்லெடிக்ஸ் என்பது ஆன்லைனில் ப்ரைமரி கணிதப் பாடம் தொடர்பான கணக்குகளுக்குத் தீர்வு காண்பவையாக இருக்கும். உலகின் எந்த மூளையில் இருந்தும் மாணவர்கள் ஒருவருக்கொருவர் மென்டல் அரித்மெடிக் விளையாட்டை விளையாடலாம். அவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அவ்வபோது அப்டேட் செய்யப்படும். உலகின் சிறந்த 100 மாணவர்கள் மட்டுமே லீடர் போர்டுக்கு அனுப்பப்படுவர்.

 

டாக்டர் கனவு 
டாக்டராகும் கனவு

நியூடெல்லியில் பிறந்த சோஹினி இந்தப் போட்டியில் பர்மிங்ஹாமில் உள்ள நெல்சன் பிரைமரி பள்ளி மாணவராக இந்த ஆண்டு போட்டியில் பங்கேற்றுள்ளார். இளம் கணித மேதையான சோஹினிக்கு டாக்டர் ஆக வேண்டும் என்பது தான் அவருடைய கனவாம்.

படிப்பில் சுட்டிப் பெண் 
ஆசிரியை பாராட்டு

'சோஹினியின் தான் விளையாடும் போது கணிதம் புரித்த உயர் புரிதலை வைத்துள்ளார் என்பதை வெளிக்காட்டியுள்ளார். அவர் படிப்பில் எப்போதுமே தனி ஆர்வம் கொண்டவர், அதைத் தான் இந்த ஆண்டு மேத்லெடிக்ஸ் போட்டியில் வெளிப்படுத்தியுள்ளார் என்று பெருமைப்படுகிறார் சோஹினியின் ஆசிரியை.