இந்த அரசு நமக்கு நல்லது செய்யுமென்று மானிய ஸ்கூட்டிக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட மாணவிகள்

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், இருசக்கர வாகனம் பெறுவதற்கான மானியம் அளிக்கப்பட உள்ளது.

அதன்படி ரூ.25 ஆயிரம் அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் ஆகியவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களே தங்களது வாகனத்தைத் தேர்வு செய்யலாம். மேலும், வாகனத்தைப் பெற ரிசர்வ் வங்கியால் அதிகாரம் அளிக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து கடன் பெறலாம்.

இதற்கான காலக்கெடுவை வருகின்ற 10 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது தமிழக அரசு. இதற்காக வீட்டை விட்டு வெளியே வர தயங்கிய பெண்கள் கூட இன்று கூட்டத்தில் அடித்து பிடித்து முண்டியடித்துக்கொண்டு செல்வதை காண முடிகிறது.

ஓட்டுனர் உரிமம் வைத்திருந்தால் தான் மானியம் கிடைக்கும் என்று ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதால், வட்டார போக்குவரத்து அலுவலங்களிலும் கூட்டம் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் மானிய ஸ்கூட்டி மீது ஆர்வம் கொண்டு வருங்காலத்தில் ஓட்டுனர் உரிமம் எடுக்க வேண்டும் என்பதற்காக இரு சக்கர வாகனம் ஓட்ட பழகிய இரு மாணவிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது.

மதுரையில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியும்,  10-ம் வகுப்பு பயிலும் வாகனப் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது வளைவில் செல்லும் பொழுது  வாகனம் நிலைதடுமாறியுள்ளது. வாகனத்தின் கட்டுப்பாடு இழந்து இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். சகோதரிகள் இருவரும் உயிரிழந்தது உறவினர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.