பத்மாவத் முரட்டு வசூல் இந்தியா முழுவதும் எவ்வளவு கலெகபஷன் தெரியுமா

சென்னை : 'பத்மாவத்' திரைப்படம் நாடு முழுவதும் நல்ல வசூலைக் குவித்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இந்தியாவில் மட்டும் ரூ. 225 கோடி வசூலைக் கடந்திருக்கிறது 'பத்மாவத்'.

பத்மாவத் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டர் தீ வைக்கப்படும் என்று ராஜபுத்ர கர்ணி சேன அமைப்பினர் மிரட்டல் விடுத்தனர். ஆனால், படம் அதையும் தாண்டி ரிலீஸ் ஆனது.

கடும் எதிர்ப்பு, சர்ச்சைகளுக்கு இடையே வெளியான பத்மாவத் திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ. 225 கோடியைக் கடந்து செம ஹிட் ஆகியுள்ளது.

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் கூட்டணியில் உருவான பத்மாவத் திரைப்படத்துக்கு படப்பிடிப்பு காலத்திலிருந்தே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி கடும் கண்டனத்துக்கு உள்ளானார்.

'பத்மாவத்' படம் தயாரானதும் சென்சார் பிரச்னை தொடங்கியது. அது ஒரு வழியாக முடிந்தால் வழக்குகள், வன்முறை போராட்டங்கள் என மீண்டும் சர்ச்சை, மாநில அரசுகளின் தடை என பல பிரச்னைகளை சந்தித்து ஒருவழியாக கடந்த 25-ம் தேதி வெளியானது.

ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட 4 மாநிலங்களில் படம் பல இடங்களில் வெளியாகாத நிலையிலும் முதல் நாளில் 19 கோடி வசூலித்து சாதனை படைத்தது 'பத்மாவத்'.

படத்தில் சித்தூர் ராணி பத்மாவதியை தெய்வத்துக்கு நிகராக காட்டப்பட்டிருக்கிற செய்தி அறிந்து போராட்டங்கள் குறைந்தன. படம் வசூலை குவிப்பதால் முதலில் திரையிடத் தயங்கிய தியேட்டர்காரர்கள், பிறகு படத்தை போலீஸ் பாதுகாப்புடன் திரையிட ஆர்வம் காட்டினர்.

தமிழ்நாட்டில் பத்மாவத்துடன் வெளிவந்த தமிழ் படங்களை விட பத்மாவத் வசூல் குவித்தது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்ட பிரதிகளை அதிகப்படுத்தி மேலும் கூடுதலான தியேட்டர்களிலும் வெளியானது.

கடந்த பிப்ரவரி 6-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் மட்டும் 'பத்மாவத்' ரூ. 225.25 கோடி வசூலை எட்டியிருக்கிறது. 'பத்மாவத்' வெளிநாடுகளிலும் செம கலெக்‌ஷன் அடித்து வருகிறது. 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தின் வசூலை முறியடிக்க வாய்ப்பிருக்கிறது.

நாளை அக்‌ஷய் குமாரின் 'Padman' திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படம் வெளியானால் 'பத்மாவத்' வசூல் நிச்சயம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 'பத்மாவத்' வசூல் விரைவில் 300 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.