மாலத்தீவு விவகாரத்தில் இந்தியா தலையிட கூடாது சீன மீடியா

பெய்ஜிங்: மாலத்தீவு உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிடக்கூடாது என சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குளோபல் டைம்ஸ் நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது. இந்தியா வருத்தம் மாலத்தீவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக அங்கு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, மாலத்தீவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை கவலையளிப்பதாகவும் நீதித்துறை மற்றும் அரசியல் கட்சியினர் கைது செய்யப்படுவது வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளது. அதிக அழுத்தம் இது தொடர்பாக சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள குளோபல் டைம்ஸ் நாளிதழில் வெளியிடப்பட்ட தலையங்கம்: மாலத்தீவில் நடக்கும் அரசியல் போராட்டம் உள்நாட்டு பிரச்னை. இந்த விவகாரத்தில் இந்தியா தலையிடக்கூடாது. மாலத்தீவுக்கு இந்தியா அதிகப்படியான அழுத்தத்தை அளித்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.