ஜியோ அதிரடி ரூ.399 ரீசார்ஜ் செய்தால் ரூ.799 கிடைக்கும் இதை பெறுவது எப்படி

முடிந்த அளவிலான காம்போ (வாய்ஸ் + டேட்டா) நன்மைகளை வழங்கிய முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் வாய்ப்புகளையும் வழங்கி வருகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் மற்றும் ங்அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் ஆகியவைகள் ஜியோவைப்போன்றே பெரும்பாலான திட்டங்களில் நன்மைகளை வழங்கிவருவதால் ஜியோ அதற்கும் ஒருபடி மேல் சென்று கேஷ்பேக் சலுகைகளை வழங்கி வருகிறது.

அப்படியாக ஜியோப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் புதிய கேஷ்பேக் வாய்ப்பானது நம்பமுடியாத வண்ணம் 200% அளவிலான பணத்தை திருப்பி தருகிறது. இந்த கேஷ்பேக் வாய்ப்பை பெறுவது எப்படி.? என்பதை விரிவாக காண்போம்.!

இந்த 200% அளவிலான கேஷ்பேக் வாய்ப்பானது ரூ.399/- அல்லது அதற்கும் மேலான ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இதை நிகழ்த்துவதின் மூலம் நீங்கள் ரூ.799/- வரையிலான லாபத்தை பெறலாம். சுருக்கமாக சொன்னால் ஜியோ நிறுவனமானது 200% நன்மைகளை குறைந்தபட்ச ரீசார்ஜ் மதிப்பில் வழங்குகின்றது.

இந்த வாய்ப்பைப் பற்றி பேசுகையில், உங்கள் ஜியோ எண்ணில் இருந்து ரூ.399/- என்கிற குறைந்தபட்ச ரீசார்ஜை நிகழ்த்தினால் ரூ.50/- மதிப்பிலான எட்டு ரீசார்ஜ் வவுச்சர்கள் உங்களுக்கு கிடைக்கும். அதாவது மொத்தம் ரூ.400/- மதிப்பிலான 100% கேஷ்பேக்கை முதலில் பெறுவீர்கள்.

 

ஜியோவில் இருந்து எதிர்கால ரீசார்ஜ்களை நிகழ்த்தும் போது, உங்களுக்கு கிடைக்கும் கெஸ்பேக் ரீசார்ஜ் வவுச்சர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். எளிமையான சொற்களில் உங்களின் அடுத்த ரீசார்ஜ்ஜில் ரூ.50/- மதிப்பிலான ஒரு வவுச்சரைப் பயன்படுத்தி ரூ.50/-ஐ தள்ளுபடியாக பெறலாம்.

ரூ.799/- என்கிற கேஷ்பேக்கில் ரூ.400/- இப்படி கழிய, மீதமுள்ள ரூ.399/- ஆனது வாடிக்கையாளர்களுக்கு மொபிவிக், பேடிஎம், அமேசான், போன்பீ, ப்ரீசார்ஜ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவைகளின் வேலட்களின் வழியாக, வேறுபட்ட மதிப்புக்கான கேஷ்பேக் வாய்ப்புகளாக கிடைக்கும்.

நீங்கள் மொபிவிக் வழியாக ரூ.399/- ரீசார்ஜ் செய்தால் ரூ.2500/- மதிப்பிலான ஹோட்டல் வவுச்சரை பெறுவீர்கள். பேடிஎம் வழியாக பணம் செலுத்துகிறீர்கள் என்றால் அதன் பின் நிகழ்த்தும் முதல் முறை திரைப்பட டிக்கெட் முன்பதிவுகளுக்கு ரூ.150/- சலுகை கிடைக்கும் அதாவது 50% கேஷ்பேக் கிடைக்கும்.

ஜியோ வழங்கும் இந்த 200% வாய்ப்பானது கடந்த பிப்ரவரி 1, 2018 தொடங்கி பிப்ரவரி 15, 2018 வரை மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமேசான், போன்பீ, ப்ரீசார்ஜ் மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவைகளை பொறுத்தமட்டில் புதிய ரீசார்ஜ் பயனர்களுக்கு முறையே ரூ.75, ரூ.50. ரூ.50/- மற்றும் ரூ100/- கேஷ்பேக்கும், ஏற்கனவே இருக்கும் பயனர்களுக்கு முறையே ரூ.30, ரூ.50. ரூ.30/- மற்றும் ரூ.30/- என்கிற கேஷ்பேக்கும் கிடைக்கும்.

கடந்த அக்டோபர் முதல் ஜியோ அதன் பிரதம உறுப்பினர்களுக்கு கேஷ்பேக் வாய்ப்புகளை தொடர்ச்சியான முறையின்கீழ் வழங்கி வருகிறது என்பதும் இந்த 200% கேஷ்பேக் ஆனது நிறுவனத்தின் நான்காவது கேஷ்பேக் வாய்ப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல டெலிகாம் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்