திருப்பாச்சி சனியன் சகடை வீட்டில் கூண்டோடு சிக்கியது போல நிஜத்தில் பிடிபட்ட சென்னை ரவுடிகள்

சென்னை: விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் 'சனியன் சகடை' வீட்டில் சென்னையின் ஒட்டுமொத்த ரவுடிகளும் ஒன்று கூடி போலீசில் சிக்கி சின்னாபின்னமாவர். அதேபோலவே சென்னையில் ரவுடி பினுவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற 72 ரவுடிகள் கூண்டோடு போலீசில் சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தலைநகராக மட்டுமல்ல.. ரவுடிகள் சாம்ராஜ்யத்தின் தலைநகராவும் சென்னைதான் இருந்து வருகிறது. திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட தென்மாவட்ட ரவுடிகள் சென்னையில் பதுங்குவதும் போலீசில் சிக்குவதும் வாடிக்கை.

இந்த நிலையில் சென்னையில் நேற்று இரவு போலீசாரிடம் 72 ரவுடிகள் வசமாக சிக்கியுள்ளனர். மலையம்பாக்கம் பினு என்கிற ரவுடியின் பிறந்த நாளை கொண்டாட சினிமா பாணியில் சென்னையில் உள்ள ரவுடிகள் அனைவரும் ஒன்று கூடியுள்ளனர்.

பண்ணை வீட்டில் கும்மாளம் 
அதிரடி காட்டிய போலீஸ்

சென்னை அருகே பண்ணை வீட்டில் குடி கும்மாளமாக ரவுடிகள் இருந்தபோது அதிரடியாக உள்ளே நுழைந்தது போலீஸ். அப்புறம் என்ன... மக்களை பீதியடைய வைத்த ரவுடிகள் கிலி எடுத்து அலறி அடித்து ஓடத் தொடங்கினர்.

 

நள்ளிரவில் சேசிங் 
ஆயுதங்கள் பறிமுதல்

இதனால் சென்னை போலீசார் நள்ளிரவில் சேசிங்கில் ஈடுபடும் நிலை ஏற்பட்டது. கொத்து கொத்தாக பதுங்கிய, தப்பிய ரவுடிகள் என 72 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து கத்திகள், டூவீலர்கள், கார்கள் என அத்தனையும் பறிமுதல் செய்து சுளுக்கெடுத்தனர்.

 

முக்கிய குற்றவாளிகள் 
போலீஸ் ஹேப்பி

சென்னையில் சிக்கிய ரவுடிகள் அனைவர் மீதும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல முக்கிய குற்றவாளிகள் வசமாக நேற்று சிக்கியது சென்னை போலீசை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

 

சினிமா பாணி 
சனியன் சகடை வீடு ரவுடிகள்

திருப்பாச்சி படத்தில் சனியன் சகடை வீட்டில் ஒரே நேரத்தில் ரவுடிகள் பதுங்கியிருந்து போலீசில் சிக்குவதாக காட்சி வரும். சென்னையில் அதேபோல் ஒரு சம்பவம் நிஜமாகவே அரங்கேறியுள்ளது.