இனி ஒதுக்க முடியாது குடித்து தான் ஆக வேண்டுமா சுகாதார பானமாக அறிவிக்க முன்வந்த அரசு

உத்தரபிரதேசத்தில் யோகி தலைமையிலான அரசு சிறப்பாக நடைபெறுகிறது, இங்கு பெரும்பாலாக கோமியத்தை கிருமி நாசினியாக பயன்படுத்தும் வழக்கம் உள்ளது

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது

இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுவது பின்வருமாறு,

பசுமாட்டு கோமியம் என்பது பல்வேறு ஆயுர்வேத குணநலன்களை தன்னகத்தே கொண்டது. எனவே, இந்த திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

தினமும் 10 முதல் 20 மி.லி வரை  கோமியத்தை குடித்து வந்தால் பல விதமான நோய்கள் சீண்டாது அதுமட்டுமின்றி சிறந்த கிருமி நாசினியாகவும் உள்ளது 

மேலும் இதற்காக ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனம் கோமியத்தை சுகாதார பானமாக தயாரிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது 

 கோமியம் பாட்டிலில் விற்பனை தயார், செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்

இதனையடுத்து தற்போது உத்தரபிரதேச மாநிலம் கோமியத்தை சுகாதார பானமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது