மாலத்தீவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கைது அவசர நிலை பிரகடனத்தை அதிரடி நடவடிக்கை

மாலே: மாலத்தீவில் அதிபர் அப்துல்லா யாமீன் நெருக்கடி நிலையை பிறப்பித்துள்ள நிலையில்,உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அப்துல்லா சையது கைது செய்யப்பட்டார்.அவருடன் நீதிபதி அலி ஹமீதும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிபதிகள் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.முன்னதாக மாலத்தீவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் அதிபர் மாமூன் அப்துல் கயூம் கைது செய்யப்பட்டார்.கைதாவதற்கு சிறிது நேரத்திற்கு முன் தாம் காரணம் இல்லாமல் கைது செய்யப்படுவதாக ட்விட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட மாமூன் அப்துல் கயூம் அதிபர் யாமின்னின் சகோதரர் ஆவார்.மாலத்தீவின் முன்னாள் அதிபர் நசஜீத் விடுவிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை ஏற்க மறுத்துள்ள தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன் 15 நாட்கள் நெருக்கடி நிலையை பிறப்பித்துள்ளார்.மாலத்தீவின் உச்சநீதிமன்ற வளாகத்திலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு எதிர்க்கட்சி எம்பிக்களை கைது செய்யும் பணியில் ராணுவம் இறங்கியுள்ளது.