தமன்னாவிற்கு விழுந்த செருப்படியே பரவாயில்லை போலயே, கண்ணீர் விடும் காஜல் அகர்வால்

சமீபத்தில் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை தமன்னா மீது ஒரு ரசிகர் செருப்பை வீசி சர்ச்சையை ஏற்படுத்தினார். தமன்னா சரியான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில்லை அதனால் தான் அவர் மீது செருப்பை வீசினேன் என்று கூறினார் அந்த வாலிபர்.

இந்நிலையில், அதே போல ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகை காஜல் அகர்வாலுக்கும் ஒரு விஷயம் நடந்துள்ளது. ஆம், நேற்று ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட காஜல் அகர்வால் அங்கிருந்த ரசிகர்களிடம் மேடையில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, காஜல் அகர்வாலை பார்த்து, அக்கா அக்கா என்று ஒரு இளைஞர் அழைத்தார். அக்கா என்ற சத்தம் வந்த திசையை நோக்கி தலையை திருப்பிய காஜல் அகரவலை பார்த்து அந்த இளைஞர் “அக்கா.. ஐ லவ் யூ” என்று கூறினார். காஜல் அகர்வால் போலியான சிரிப்பை வெளிபடுத்தி கொண்டு அங்கிருந்து நடையை கட்டினார்.

சும்மா விடுவோமா..? துரத்தி சென்று அந்த ரசிகர் உங்களை அக்கா என்று அழைத்ததை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்று கேட்டோம். கண்டிப்பாக அந்த ரசிகருக்கு நான் ராக்கி கயிறு கட்டாமல் விட மாட்டேன் என்று கூறினார். தமன்னாவை வாங்கிய செருப்படியே பரவாயில்லை என்பது போல சோக ரேகை படர்ந்த முகத்துடன் அங்கிருந்து சென்றார் காஜல் அகர்வால்.